“வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” எச்சரிக்கை

முகக்கவசம் அணியும் சட்டத்தை இன்று முதல் கடுமையாக அமல்படுத்த பொலிஸார் முடிவு செய்துள்ளனர். அதற்கமைய எக்காரணம் கொண்டும் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.