வெறிச்சோடிக் காணப்படும் ஓட்டமாவடி

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பகுதியில் ஊரடங்குச் சட்டம் இல்லாத போதும் குறித்த பிரதேசம் சனநடமாட்டமின்றி வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

குறித்த பகுதியில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் பெரிதும் அச்ச நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், வாழைச்சேனை பிரதேச வர்த்தக நிலையங்கள் இன்று திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.