வெலிகம பிரதேச வீடொன்றிலிருந்து 10 மி.ரூபாய் கண்டுபிடிப்பு

குறித்த பணத்தை சம்பாதித்த காரணத்தை அவர் வெளிப்படுத்த முடியாமல் போனதாலேயே வீட்டின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய தொகை குறித்த வீட்டில் எவ்வாறு காணப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சந்தேகநபர் சவுதியில் கணினி விற்பனை ​மய்யத்தில் பணியாற்றி வருகிறாரென்றும் அவரது மனைவி கடந்த டிசெம்பர் மாதம் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் சந்தேகநபரின் வீட்டைப் பார்க்கும் போது, அவர்கள் வசதியானவர்கள் எனத் தெரியவில்லையென்றும் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நாளைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.