‛ஸ்விட்ச் டில்லி’ திட்டத்துக்கு கமல் பாராட்டு

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல், ‘டுவிட்டரில்’ கூறியுள்ளதாவது:என் நண்பரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், அரசு பயன்பாட்டுக்கான கார்களை, ஆறு மாதங்களுக்குள் இலத்திரனியல் வாகனங்களாக மாற்றுகிறார். மாசு கட்டுப்பாட்டுக்கான முக்கிய யுக்தியாக, ‘ஸ்விட்ச் டில்லி’ என்ற, திட்டத்தை முன் வைத்திருக்கிறார். இலத்திரனியல் வாகன பயன்பாட்டை, மக்கள் இயக்கமாக மாற்றும் முனைப்பில், இலத்திரனியல் வாகனம் வாங்குவோருக்கு, மானியங்களை அறிவித்திருக்கிறார்.

திட்டம் போடுவதோடு நிறுத்தாமல், அதை அமுல் செய்வதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கி விட்டார். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, கட்சியின் பிரசார பணிகளை தீவிரப்படுத்த வும், மேடை பேச்சுகளை வலிமை பெற வைக்கவும், தலைமை நிலைய செயலர் சத்தியமூர்த்தியை, தலைமை நிலைய பரப்புரையாளராக, கமல் நியமித்துள்ளார்.