ஹக்கீமாக மாறிய சிவலிங்கம் கைது

முஸ்லிம் பெயருடன் பள்ளிவாசலில் கடமையாற்றிய தமிழர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பண்டாரகம- அட்டுலுகம மாராவ பிரதேசத்தின் பைகுர் ரஹ்மான் பள்ளியில் வைத்தே பெருமாள் சிவலிங்கம் என்ற குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாரும், இராணுவத்தினரும் இன்று பண்டாரகம பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.