ஹட்டனில் எதிர்ப்பு போராட்டம்

“ஒன்றிணைந்த இளமை ஹட்டனில் தொடக்கம்” என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் ஹட்டன் பகுதியில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

எம்.ஆர். டவுனில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, ஊர்வலமாக வந்து மணிக்கூட்டு கோபுரத்தின் முன்பாக சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“உலகத்தின் முன் தாய் நாட்டை கேவலமாக்காதே, பசிக்கு நிறம் மதம் கிடையாது, விலை குறை அடுத்த தலைமுறை வாழ வேண்டும், ரம்புக்கனை இளைஞனுக்கு நீதி வேண்டும், சிறார்களின் கல்வியை நாசம் செய்யாதே,” போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சி படுத்திய வண்ணம், கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.