10ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது

தோட்ட முகாமையாளருக்கு இடமாற்றம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட நானுஓயா, உடரதல்ல தோட்டத் தொழிலாளர்கள், கடந்த சனிக்கிழமை (11) முதல் முன்னெடுத்துவரும் போராட்டம் 10ஆவது நாளாக இன்றும் தொடர்ந்தது.