13ஐ ஆதரித்ததால் மூன்று தடவைகள் சுட்டப்பட்டார் வட மாகாண ஆளுனர்!

தமிழ் மக்களின் இதயங்களை வெல்வதற்கு தான் பல தியாகங்களை செய்துள்ளதாக புதிதாக நியமிக்கப்பட்ட வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டார். வடமாகாண ஆளுனராக நியமிக்கப்பட்ட ரெஜினோல்ட் குரே நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்று கொண்டதுடன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் போது, எதிர் தரப்பிலிருந்து 13ஆம் திருத்தச்சடத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தமையினால் தன் மீது மூன்று தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அந்த சம்பவங்களிலிருந்து தான் தப்பியதாகவும் கூறினார். அத்துடன் வடக்கில் சகல அவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படும் என்றும், இதற்கான ஒப்பந்தங்கள் வடபகுதியிலுள்ளவர்களுக்கே வழங்கப்படும் என்றும் கூறினார். தனது அரசியல் வாழ்வின் இறுதி தருணங்களை வடபகுதி மக்களுடன் கழிக்க வேண்டும் என்று உறுதிகொண்டிருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.