15 வருடங்களின் பின் தமிழருக்கு கிடைத்த மகிழ்ச்சி

கோண்டாவிலைச் சேர்ந்த 45 வயது தேவராசா சிவபாலன் என்பவரே இவ்வாறு விடுதலையாகியுள்ளார். 

இவர் கடந்த 2006ஆம் ஆண்டு கொழும்பு, வத்தளையில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார். 

அதன்பின், 2008ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், மேல் நீதிமன்றத்தால் இவர் குற்றவாளி இல்லையென தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையாகியுள்ளார்.