16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலுள்ள மாவட்டங்கள் மற்றும்  வடமாகாணத்தில் 4 மாவட்டங்கள் தவிர, மன்னார் உட்பட ஏனைய 16 மாவட்டங்களுக்கும் சிவப்பு அபாய எச்சரிக்கையை திணைக்களம் விடுத்துள்ளது.

கடும் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.