17 நாள் போராட்டம்; 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு

உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். சுரங்க விபத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஒருவர் பின் ஒருவராக மீட்டனர். சுரங்கத்ல் இருந்து ஒருவரை மீட்க 2 முதல் 3 நிமிடங்கள் வரை ஆவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.