19,620 இலங்கையர்கள் நாடு திரும்ப இதுதான் சரியான நேரம்

இந்த பொது மன்னிப்பு காலம் மார்ச் 17 ஆம் திகதி தொடங்கி ஜூன் 17 ஆம் திகதி வரை 3 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 19,620 இலங்கையர்கள் குவைத்தில் செல்லுபடியான வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறினால், அபராதம் விதிக்கப்படாமல் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார், மேலும் குவைத்துக்குள் சட்டப்பூர்வமாக மீண்டும் நுழைய அனுமதிக்கப்படுவார்.

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்த சந்தர்ப்பம் சிறந்த வாய்ப்பாக இருப்பதால், சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்தால், இது குறித்து அறிவித்து அவர்களை நாட்டுக்கு அழைத்து வர உதவிடுமாறு  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பொதுமக்களை கோரியுள்ளது.