1990ம் ஆண்டு……………………

1990ம் ஆண்டு நான் ஒருவிபத்தாக வடக்குகிழக்குமாகாணசபை உறுப்பினராக இருந்த போது ஒரேநாளில் மூன்று பாடசாலைகளைத் திறந்தோம் .இதுமாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலயம்…அதிபராக கணிதப்புலி அக்கரைப்பற்றைச்சேர்ந்த ஹயாத்து பாவா ஆசிரியரை நியமித்தோம் …

நண்பர் Y.அகமத் அவர்கள் கோட்டக்கல்வி அதிபராகவிருந்தார் அவரின் பங்களிப்பே அதிகம் ..நான் ஒரு டிரக்டரில் பிறைந்துரைச்சேனை அதிபரான SAS மகுமூத் அவர்களிடம் கதிரை மேசைகளை இரவலாக ஏற்றிவந்தேன் ..கோட்டக்கல்வி அதிகாரி அவர்களும் நானும் விருந்தினர் பதிவேட்டில் குறிப்புகளை எழுதி பாடசாலையை ஏழு மணிக்கெல்லாம்ஆரம்பித்து வைத்தோம்..
அன்று கற்குடா முஸ்லிம்களுக்கு ஒரேநாளில் மூன்று பாடசாலைகள் உருவாக ஒத்துழைத்த நல்ல உள்ளங்களை இந்தக்கணத்தில் நினைவுகொள்கிறேன்…
முதலமைச்சராகவும் கல்விஅமைச்சராகவுமிருந்த தோழர் வரதராஜப்பெருமாள் , செயலாளராகவிருந்த ஜனாப் மன்சூர் அவர்கள் மற்றும் மாகாண கல்விப்பணிப்பாளர் மறைந்த தியாகராசா அவர்கள்… பாடசாலைக்கான காணியைத்தந்துவிய அகமதுலெவ்வை அவர்கள் அனைவரையும் நினைவு கொள்வோம் நண்பர்களே

(Slm Hanifa)