21 வயது மாணவி மேயராக பதவியேற்பு

இதையடுத்து மேயர் வேட்பாளராக முடவன்முகல் வார்டில் வெற்றி பெற்ற 21 வயது கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரனை மார்க்சிஸ்ட் கட்சி ஞாயிறன்று அறிவித்தது. திருவனந்தபுரம் ஆல் செயின்ட்ஸ் கல்லூரியில் இவர் பிஎஸ்சி கணிதவியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.

இந்நிலையில் நடைபெற்ற மேயர் தேர்தலில் ஆர்யா ராஜந்திரன் 54 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து திருவனந்தபுரம் மேயராக ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்றுக் கொண்டார்.