’23ஆம் திகதி வருக’ எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார் சோனியா

அன்று மதியம், மீண்டும் பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க) ஆட்சியில் அமருமா அல்லது வேறு கட்சிகள் ஆட்சியை பிடிக்குமா என்பது தெரியவரும். ஆரம்பத்தில் பா.ஜ.கவே ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக, பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தகவல் வெளியானது.

இந்நிலையில், மத்தியில் மீண்டும்பா.ஜ.க ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான அதிரடி நடவடிக்கைகளை, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா தொடங்கியுள்ளார். அதன் முதல் கட்டமாக தனது ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலுள்ள மாநில கட்சிகள், பா.ஜ.க பக்கம் செல்லாமல் இருக்கும் எதிர்க்கட்சிகள் அனைவருக்கும் சோனியா அழைப்பு விடுத்துள்ளார்.

சோனியாவின் அழைப்பு கடிதம், பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆகிய கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள தினத்தன்று, மாநில கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் டெல்லியில் ஒன்று திரட்ட சோனியா அழைப்பு விடுத்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் பாரதிய ஜனதாவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தையும் ஓரணியாக திரட்டும் அடித்தளம் அமைவது குறிப்பிடத்தக்கது.