3 அமைச்சுகள் சி.வி. வசமாகின

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தான் வகிக்கும் அமைச்சுகளுக்கு மேலதிகமாக, இன்னும் 3 அமைச்சுகளைத் தன்வசப்படுத்திக்கொண்டார். அந்த மூன்று அமைச்சுகளுக்கான பொறுப்புக்களையும், நேற்று மாலை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் சி.வி., வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். வட மாகாண அமைச்சர் வைத்திய கலாநிதி பத்தமநாதன் சத்தியலிங்கத்திடமிருந்த, சமூகசேவைகள், புனர்வாழ்வு மற்றும் மகளிர் விவகாரம் ஆகிய மூன்று அமைச்சுக்களே முதலமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

வட மாகாண சபையின் அமைச்சரவை தொடர்பில் அண்மைய காலங்களில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் வெளியாகி வந்த நிலையில், எந்தவோர் அமைச்சரும் மாற்றப்படாமல், ஏற்கெனவே தன்னிடம் இருந்து சுகாதார அமைச்சருக்கு வழங்கிய மூன்று அமைச்சுக்களையே, முதலமைச்சர், நேற்று மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். முதலமைச்சர் நிதியம் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டே இந்த அமைச்சுகளை மீளப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.