5 மாநிலத் தேர்தலில் வெற்றி யாருக்கு?- வாக்கு எண்ணிக்கை

போபாலில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணும் பணி நடந்து வருகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி அந்தந்த மையங்களில் இன்று காலை 8:00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 12 மணியளவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற விவரம் தெரிய வரும்.

5 மாநிலத் தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை; தெலங்கானாவில் டிஆர்எஸ்

மத்திய பிரதேசம்:

காங்கிரஸ்- 101

பாஜக- 88

பிஎஸ்பி- 5

ராஜஸ்தான்:

காங்கிரஸ்- 101

பாஜக- 68

பிஎஸ்பி- 3

சத்தீஸ்கர்:

காங்கிரஸ்- 55

பாஜக- 21

பிஎஸ்பி- 6

தெலங்கானா:

தெலங்கானா ராஷ்டிர சமிதி- 83

காங்கிரஸ்- 24

பாஜக- 6

மிசோரம்:

எம்என்எப்-26

காங்கிரஸ் -9

பாஜக- 1

வாக்கு எண்ணிக்கை

5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

———————————

சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் உள்ள 90 இடங்களுக்கு கடந்த நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசம், 40 இடங்களைக் கொண்ட மிசோரம் ஆகிய சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 28-ல் தேர்தல் நடந்தது. 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மற்றும் 119 இடங்களைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடந்தது. ராஜஸ்தானில் ஒரு வேட்பாளர் இறந்ததால் ஒரு தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற 678 இடங்களுக்காக சுமார் 8,700 பேர் போட்டியிடு கின்றனர். அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 2,907 பேர் களத்தில் உள்ளனர். மொத்தம் 1,74,724 மின் னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் அதிக பட்சமாக மத்திய பிரதேசத்தில் 65,367 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வாக்குகள் பதிவு செய்யப்பட்டு முத்திரையிடப்பட்ட (சீல்) இயந் திரங்கள் 5 மாநிலங்களில் உள்ள 670-க்கும் மேற்பட்ட மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மத்தியில் பாஜக தலைமை யிலான அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிகிறது. இதையடுத்து, அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு மெகா கூட்டணி அமைக்க முயன்று வருகின்றன.

மக்களவைக்கு முன்னோட்டம்

எனவே, மக்களவைத் தேர்த லுக்கு இந்தத் தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் எனத் தெரிகிறது. குறிப்பாக, தேர்தல் நடைபெற்ற 5-ல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அதேநேரம் காங்கிரஸ் கட்சிக் கும் இது மிக முக்கியமான தேர்தல் ஆகும். கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த பெரும்பாலான சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. வடகிழக்கு மாநிலங் களில் மிசோரம் மாநிலத்தில் மட்டும் இப்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ், அதை தக்கவைத்துக் கொள்ள வேண் டியது அவசியமா கிறது. மேலும் பாஜக ஆளும் 3 மாநி லங்கள் மற்றும் டிஆர்எஸ் ஆளும் தெலங்கானாவில் ஆட்சி யைக் கைப்பற்ற வேண்டும் என்றும் முனைப்புடன் உள்ளது.

கருத்துக் கணிப்பு

இதனிடையே, மத்திய பிர தேசம், சத்தீஸ்கரில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், காங்கிரஸ் கூட்டணி கடும் போட்டியாக உருவெடுத்ததால், எந்தக் கட்சிக்கும் பெரும் பான்மை கிடைக்காது என சில அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா பாணியில்..

இந்நிலையில் கர்நாடக மாநில அமைச்சரும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான டி.கே. சிவக்குமார் நேற்று ஹைதராபாத் வந்தார். அவர், தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப் போது ஒருவேளை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட் டால், கர்நாடகாவைப் போல, சுயேச்சைகள் மற்றும் இதர கட்சியினரின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியில் இடம் கிடைக்காத அதிருப்தியால் சுயேச்சையாக போட்டியிட்டுள்ள வேட்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேவைப்பட் டால் எம்ஐஎம் கட்சியுடனும் பேசு வது என தீர்மானிக்கப்பட் டுள்ளது.

இந்நிலையில், எம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி ஹெல்மட் அணிந்து பைக்கில் சென்று, டிஆர்எஸ் கட்சித்தலைவர் கே. சந்திரசேகர ராவை சந்தித்து பேசி உள்ளார். பின்னர் அவர் கூறும்போது, “தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி தனிப் பெரும் பான்மையுடன் வெற்றி பெறும். எனினும், டிஆர்எஸ் கட்சிக்கு எங்கள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும்” என்றார்.

ஆளுநருடன் சந்திப்பு

இதனிடையே, காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூ னிஸ்ட், ஜன சமிதி ஆகிய கூட்டணி கட்சித்தலைவர்கள் ஆளுநர் நரசிம்மனை நேற்று சந்தித்தனர். அப்போது, மெகா கூட்டணி வெற்றி பெற்றால், இதை ஒரே கட்சியாகக் கருதி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.