5 மாநில தேர்தல் முடிவு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்துமா?- கலக்கத்தில் பாஜக; மகிழ்ச்சியில் காங்கிரஸ்

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 11-ம் தேதி வெளியானது. இதில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இந்த 3 மாநிலங்களும் பாஜகவின் கோட் டையாக கருதப்பட்ட மாநிலங்கள். பாஜகவின் கோட்டையை தகர்த் ததன் மூலம் வரும் மக்களவைத் தேர்தலில் மோடி அரசை வீழ்த்தி விடலாம் என்ற நம்பிக்கை காங்கி ரஸுக்கு ஏற்பட்டுள்ளது. அதேநேரத் தில் இந்த படுதோல்வி பாஜகவை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

5 மாநில தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை எளிதில் சரி செய்து விடுவோம். இந்த 3 மாநிலங்களிலும் மக்களவைத் தேர்தலில் பெரும்பாலான இடங் களை பெறுவோம். ஆனால், இந்த தோல்வி பாஜக வலுவாக இல்லாத தமிழகம் போன்ற மாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகியவை பாஜகவுடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை. ஆனால், தேமுதிக, பாமக, மதிமுகவுடன் கூட்டணி அமைத்து 19 சதவீத வாக்குகளையும், 2 எம்.பி. தொகுதி களையும் பெற்றோம். தற்போது 3 மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தோல்வியால் 2019-ல் இதுபோன்ற கூட்டணியை அமைக்க முடியாது” என்றார்.

அதே நேரத்தில் 5 மாநில தேர்தல் முடிவுகளால் தமிழக காங்கிரஸில் உற்சாகம் கரை புரண் டோடுகிறது. 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு தள்ளப் பட்டது. ஆனால், 2019-ல் திமுக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை கள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி என வலுவான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது.

இதுதொடர்பாக முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸிடம் கேட்டபோது, ‘‘3 மாநில தேர்தல் வெற்றி காங்கிரஸுக்கு புது ரத்தத்தை பாய்ச்சியுள்ளது. தமிழ கத்தில் திமுக – காங்கிரஸ் மதச்சார் பற்ற கூட்டணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. 2004-ம் ஆண்டுபோல 2019-ல் திமுக – காங் கிரஸ் கூட்டணி 40 இடங்களையும் வெல்லும்” என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலரிடம் பேசியபோது, ‘‘3 மாநில வெற்றியால் தமிழகத்தில் காங்கி ரஸுக்கு 2009-ல் ஒதுக்கப் பட்ட 15 தொகுதிகள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றனர்.

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பலம் பெற்று விடக் கூடாது என திட்டமிட்டு காய் நகர்த்தி வரும் பாஜக, திமுக – காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த அதிமுகவை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதிமுக ஒரே கட்சியாக போட்டியிடும் பட்சத்தில் திமுக – காங்கிரஸின் வெற்றியை தடுக்க முடியும் என்று மோடியும், அமித் ஷாவும் நினைப்பதாக பாஜக நிர்வாகி ஒருவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் தெரிவித்தார்.

பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த ரஜினி காந்த், ‘‘5 மாநில தேர்தல் முடிவு கள் பாஜகவுக்கு பெரும் பின்ன டைவுதான். பாஜக தனது செல் வாக்கை இழந்து வருவதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது” என கூறியிருப்பது தமிழக பாஜக வினரை அதிர்ச்சி அடைய வைத்துள் ளது. ரஜினியே பாஜகவை கைவிட்டு விட்டதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.