50 ஆண்டுகளுக்குப் பின் பூமியின் சுழற்சி வேகத்தில் மாற்றம்

பூமி 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பூமி 24 மணி நேரத்திற்குள் தனது ஒருநாள் சுழற்சியை முடித்துள்ளது. பூமி தன் வட்டப்பாதையில் சுழன்று கொண்டு சூரியனையும் 365 நாட்களில் சுற்றி வருகிறது என்பதே அறிவியல் உண்மை.