‘ 5,939 பலா மரங்கள் வெட்டப்பட்டுள்ளன‘

மாத்தளை மாவட்டத்தில் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் மாத்திரம் 5,939 பலா மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட செயலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவல்களுக்கு அமைய, 2019ஆம் ஆண்டு 3,346 பலாமரங்களும் கடந்தாண்டு 2,593 மரங்களும் வெட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.