‘ 5,939 பலா மரங்கள் வெட்டப்பட்டுள்ளன‘

இதற்கமைய, 2019ஆம் ஆண்டு உக்குவளை பிரதேச செயலகப் பிரிவில் 755 பலா மரங்களும், இரத்தோட்டை பிரதேச செயலகப் பிரிவில் 652 பலா மரங்களும்,யட்டவத்த பிரதேச செயலகப் பிரிவில் 316 பலா மரங்களும், பல்லேபொல பிரதேச செயலகப் பிரிவில் 253 பலா மரங்களும்,
கலேவல பிரதேச செயலகப் பிரிவில் 183 பலா மரங்களும், தம்புள்ளை பிரதேச செயலகப் பிரிவில் 18 பலா மரங்களும் வெட்டப்பட்டுள்ளன.

அதிகமாக மாத்தளை செயலகப் பிரிவிலேயே பலா மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வில்கமுவ பிரதேச செலயகப் பிரிவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான 12 மரங்களே வெட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்தாண்டு மாத்தளை செயலகப் பிரிவிலேயே அதிக பலா மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய, 592 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதுடன், மிகக் குறைந்த எண்ணிக்கையாக லக்கல பிரதேச செயலகப் பிரிவில் 7 பலா மரங்களே வெட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.