6 இஸ்லாமியர்களைக் காப்பதற்காக உயிரை துச்சமெனக் கருதி நெருப்புக்குள் புகுந்த இந்து நபர் : மரிக்காத மனிதம்!


இந்துத்வ குண்டர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டிலிருந்து இஸ்லாமியர்களை மீட்ட இந்து மதத்தைச் சார்ந்த நபர் உயிருக்குப் போராடி வருகிறார். வடகிழக்கு டெல்லியில் நடந்த சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டத்தின் போது, இஸ்லாமியர்கள் மீது இந்துத்வா கும்பல் நடத்திய வன்முறை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. வன்முறைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.