இந்த கடினமான காலங்களில் இந்தியாவுடன் நிற்க இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புவதாகவும், எனவே ஐபிஎல் போட்டி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறுத்தி வைக்கப்படும் ஐபிஎல்லின் மீதமிருக்கும் போட்டிகல் எப்போது நடைபெறும்? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையில், தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) கிரிக்கெட் தொடரை பாதியில் நிறுத்தி, மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) முடிவு செய்துள்ளது