இவர் கனடாவில் வாழ்ந்த நாட்களை விட…? அயற்லாந்து, பிரித்தானியாவில் அதிகம் வாழ்ந்தவர். இந்த மூன்று நாட்டுக் கடவுச் சீட்டையும் வைத்திருப்பவர்…?
இத் தேர்தலின் வெற்றி எது என்பதை விட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சக முதலாளித்துவ நாடுகளிடம் இன்னும் சுரண்டும் வரிப் போர் இற்கு கிடைத்த முதல் தோல்வியாக இதனைப் பார்க்கலாம்.
எலான் மக்ஸ்(Elon Musk) இன் தீவிர வலதுசாரிப் பலத்துடன் எல்லாம் எமக்கானது, நாமே பெரியவர்கள், நாமே எல்லாவற்றையும் அனுபவிக்க உருத்துடையவர்கள் என்ற மேலாதிகத்தின் உச்சமாக தற்போதை அமெரிக்க ட்றம் ஆட்சியிற்கு கிடைத்த தோல்வியாக இதனைப் பார்க்கலாம்.
ட்றம்(Trump), எலான் மக்ஸ் இருவரின் ஆதரவு பெற்ற பழமைவாதக் கட்சி மூன்று மாதங்களுக்கு முன்பு தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்ற அளவிற்கான 20 சதவிகிதத்திற்கு மேலான ஆதரவு உடைத்தெறியப்பட்டு இந்த வெற்றி லிபரல் இற்கு கிடைத்திருக்கின்றது.
இந்தத் தேர்தலில் ஏற்பட்ட வருந்தத்தக்க தோல்விகளில் பிரதானமானது புதிய ஜனநாயகக் கட்சியின் உத்தியோக அரசியல் கட்சி என்றான அரசியல் அந்தஸ்தை இழக்கும் அளவிற்கான 7 ஆசனங்களை மட்டும் பெற்றதாகும்.
அத்தோடு அதன் தலைவர் ஜஸ்மீர் சிங் (Jasmeet Singh) பழமைவாதக் கட்சி தலைவர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre) போல் தோன்றும் போனார் தனது சொந்தத் தொகுதியில்.
கடந்த 10 ஆண்டுகளில் கனடாவிற்குள் நடைபெற்ற பல சிறந்த மக்களுக்கான நலத்திட்டங்களில் புதிய ஜனநாயகக் கட்சியின்(NDP) போராட்டப் பங்களிப்பு அளப்பரியது.
அது இனியும் தொடர்ந்தாலும் அது புதிய தலைமையிற்கு கீழ்தான் நடைபெறும்.தற்போதைய தலைவர் தேர்தல் தோல்விகளை தார்மீகமாக ஏற்று கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து இறங்கிவிட்டார்.
அமெரிக்காவிற்கு எதிரான செயற்பாட்டில் ‘நீயா நானா’ என்ற போட்டியினால் இந்த புதிய ஜனநாயகக் கட்சியின் வாக்குகளின் ஒரு பகுதி, அதிகம் பழமைவாதக் கட்சிக்கும், மிகுதி லிபரல் கட்சிக்குமாக மாற்றமடைவதாக வாக்காளர் கவனம் செலுத்தியதை புள்ளி விபரங்கள் தெரிவிகின்றன.
இதில் அதிகம் இளைஞர்கள் தமது மாற்றத்தை வெளிப்படுத்தியும் உள்ளனர்.இது இடது சிந்தனையில் ஏற்படும் நம்பிக்கையீனம் இதற்கு முழுவதும் மறுவழமாக வலதை ஆதரிக்கும் செயற்பாட்டை உடைய சந்தர்பவாத மேற் தட்டு மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் உணரப்படுகின்றது.
பொருளாதார நிபுணராக கனடாவின் வங்கிகளின் கவனராகவும் அதே மாதிரியான பதவியை வகித்தவர் மார்க் கார்னி.ஐரோப்பி யூனியனில் இருந்து பிரித்தானியா பிரிந்த பின்பு பிரித்தானியாவின் பொருளாதாரத்த நிலை நிறுத்த பிரித்தானியாவால் தமது நாட்டவர் அல்லாத மார்க் கார்னி நியமிக்கப்பட்டு அப் பதவியில் சிறப்பாக செயற்பட்வர் என்று முதலாளித்துவ நிபுணர்கள் நம்புகின்றனர்.
கூடவே கடந்த லிபரல் அரசின் முன்னாள் பிரதமர் ஜஸ்ரின் ரூடோவின் பொருளாதார ஆலோசகராவும் இவரே பணியாற்றி இருக்கின்றார்.
இந் நிலையில் உலப் பொருளாதாரச் சரிவின் ஒரு அங்கமாக கனடாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை மார்க் கார்னி எழுந்து நிற்கச் செய்வாரா என்பதை இன்னும் சில மாதங்களில் நாம் உணர முடியும்.
ஆனால் அமெரிக்காவுடன் அதிகளவு எல்லையைப் பகிரும் ஒரு முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையுடைய நாட்டின் புதிய ஆட்சி நிச்சயம் ட்றம் இன் எதேச்சாகாரப் போக்கிற்கு கடிவாளத்தை சில மட்டங்களில் போடும் என்று நம்பலாம்.
அது அணி சேராக் கொள்கையுடனான உலக சமாதானம் வரை விரிவடைந்தால் மார்க் கார்னி உலக வரலாற்றில் தனித்துவமான இடத்தை நிச்சயம் பெறுவார்.