நாளை மறுதினம் முதல் ஊரடங்கு தளர்த்தல் பற்றிய அறிவித்தல்

ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் திங்கட்கிழமை தளர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை ,கண்டி, கோகலை, புத்தளம் மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில்  இவ்வாறு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சங்கம்புழா கிருஷ்ண பிள்ளை கவிஞர்

(J P Josephine Baba)
சங்கம்புழா கிருஷ்ண பிள்ளை என்ற கவிஞரை நினைத்தால் துயர் தொற்றி கொண்டாலும், அவருடைய கவிதைகள் ஒரு தாலாட்டும் சங்கீதம் போன்றே நம்மை பின் தொடர்கிறது. நம் கவலைகளை தேற்றும் இசையாக தொடர்கிறது. உயிரோட்டமான அவருடைய வார்த்தைகள் ஆதரவாக நம்மை பின் தொடர்கிறது.

பாடங்களை கற்போம்….! படிப்பினையாக கொள்வோம்….!! மனித குலத்தை மீட்போம்…..!!! (பகுதி 1)

(சாகரன்)

கோவிட் -19 க்கு எதிரான போரை வியட்நாம் எவ்வாறு வென்றது

உலகின் பரபரப்பான விடயங்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. அவை ஆக்கமாகவும், அழிவாகவும்; வெற்றிகளாகவும், தோல்விகளாகவும்; நன்மைகளாகவும், தீமைகளாகவும் இருந்திருக்கின்றன. இவற்றில் இருந்து பாடங்களை கற்று அவற்றை எமக்கான படிப்பனையாக கொண்டு மனித குல மீட்சிக்காக அவற்றை பயன்படுத்வோம்.

தோழர் பத்மா (அதிபர் அமலநாதன் மடு வலயம்) அடம்பன்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( EPRLF) இன் வன்னி மாவட்டத்தின் ஆரம்பகால அரசியல் செயற்பாட்டாளரான தோழர் பத்மா (அதிபர் அமலநாதன் மடு வலயம்) அடம்பன்-கன்னாட்டி கிராமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். அவர் புற்றுநோயின் காரணமாக மரணமடைந்துள்ளார் என்ற துயரச்செய்தியை தோழர்கள் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.

2019 சாகித்ய அகாடமி விருது விருது பெற்ற தமிழக எழுத்தாளர் திரு சோ. தர்மன் அவர்களின் ஊரடங்கு அனுபவம்.

நேற்று சாயங்காலம் இலேசான பல்வலி…

டாக்டருக்கு போன்பண்ணினேன். க்ளினிக் திறப்பதில்லை என்றும் மாத்திரை மெசேஜ் பண்ணுகிறேன் வாங்கி சாப்பிடுங்கள் பார்த்துக்கொள்ளலாம் வேதனை குறையும் என்றார்…

சரியாக இரவு ஏழு மணிக்கு முகமூடி ஹெல்மெட் சகிதம் மெடிக்கலுக்குப் புறப்பட்டேன்…

நான் அறிந்த வரை……

(Amirthalingam Baheerathan)

இன்று இங்கிலாந்தில் கோவிட்-19 தொற்றை தடுக்க மேலும் மூன்று வாரங்களுக்கு சமூக தனிமை நீடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் இந் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியில் சமூக தனிமை ஒரளவு தளர்த்தப்பட்டுள்ளது. பொதுவாக தொற்றும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது என ஐரோப்பாவில் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதற்கான ஆதாரங்கள் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வண்ணம் வெளிப்படையாக தெரியவில்லை.

ஊடகங்கள் எழுப்பி இருக்க வேண்டிய கேள்விகள்

ஏன் மருத்துவ சேவை பலவீனமாக இருந்தது? அவ்வாறு பலவீனமாக இருந்தது தான் கூடுதல் மரணங்கள் சம்பவிக்கக் காரணமா?
சீனாவில் வூஹான் மாநிலம் ஜனவரி 23இல் முற்றாக மூடப்பட்டது. ஜனவரி 31இல் உலக சுகாதார ஸ்தாபனம் அபாய எச்சரிக்கையை அறிவித்தும் ஏன் நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை?
உலனின் செல்வத்தின் 50 வீதத்தை தன்னாட்டில் வைத்துள்ள அமெரிக்காவில் ஏன் இவ்வளவு தொகையான அழிவு அதுவும் சிறுபான்மையின மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது?

மனது கேட்குதில்லையே இந்த வலிந்தெடுத்த மரணங்களை கேட்டும் போது

(சாகரன்)

சில தினங்களுக்க முன்பு எனது நண்பர் ஒருவர் என்னை அழைத்து தனது மிக நெருங்கிய உறவினர்… மைதுனி முறையானவர் கொரனா வைரஸ் தாக்கத்தினால் மருத்துவ மனையில் மரணித்ததாக கூறினார். அவருக்கான ஆறுதலை சொல்லிவிட்டு தொடர்ந்தும் அவரின் பேச்சை செவி மடுத்தேன்.

நலவாரிய அட்டை இல்லாட்டியும் வயிறு இருக்குல்ல!- அரசின் நிவாரணம் கிடைக்காமல் அல்லாடும் மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர்

ஷாஜியை முதன்முதலில் சந்தித்த தருணம் மனதைவிட்டு இன்னும்கூட அகல மறுக்கிறது. ஆட்டோ ஓட்டுநர் ஷாஜி தவழ்ந்து செல்லும் மாற்றுத்திறனாளி. அவரது இரண்டு கால்களும் போலியோ பாதிப்புக்குள்ளாகி சிறுத்துப்போய் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு மனம் நிரம்பத் தன்னம்பிக்கையோடு ஆட்டோ ஓட்டி வந்தார் ஷாஜி.

வருமானத்தை இழந்த சகலருக்கும் நிவாரணம்

ஓட்டோ சாரதிகள், பாடசாலை மாணவர்களை ஏற்றியிறக்கும் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபட்டிருக்கும் சாரதிகள், கட்டுமாணத் துறையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கும், 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.