ஒரு நாடு, ஒரே சட்டம்; கிழக்கில் அமோக வரவேற்பு

ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணிக்கு கிழக்கு மாகாணத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

கொரோனா மரணங்கள், தொற்றாளர் எண்ணிக்கை

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 21  பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 14 ஆண்களும் 07 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,461ஆக அதிகரித்துள்ளது.

அஞ்சலி: சமூகப் போராளி செ. கணேசலிங்கன்

(தோழர் ஜேம்ஸ்)

ஈழவிடுதலைப் போராட்டத்தின் 1980 கால கட்டம்தான் பொன்னான காலம் எனலாம். இக்கால கட்டத்தில்தான் பலரும் இளைஞர்கள் என்றில்லாமல் சகலரும் இணைந்து ஒரு பெரிய நம்பிக்கையுடன் ஒரு இலக்கை நோக்கி பயணித்த கால கட்டம்.

அஞ்சல: மார்க்கண்டு ராமதாசன்

(Jaffna Fashion)

(1957 – 2021)

யாழ்ப்பாணக் குளப்புனரமைப்பு முன்னோடி

காணாமல் போன யாழ்ப்பாணக் குளங்கள் கண்டுபிடிக்கப்பட்டும் மற்றக்குளங்கள் புனரமைக்கப்படவும் வேண்டும் என்று எச்சரித்தும் தானே குளங்களைப் புனரமைத்தும் இந்த மகத்தான பணியை, மக்கள் இயக்கத்தை தொடக்கிவைத்த முன்னோடி இன்று தனது விழிப்புணர்வு நடவடிக்கைகள் நனவாகின்ற, இந்நாள் முதல்வர் மணிவண்ணன் காலத்தில் ஆரியகுளம், துரும்பைக்குளம், வட்டக்குளம், யாழ் நகரக்குளம் புனரமைக்கப்படுகின்ற காலத்தில் அதனைப் பார்க்க கொடுத்துவைக்காமால் இன்றைய தினம் காலமானார். நாளை இவரது பூதவுடல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆதரவாளர்களின் அஞ்சலிக்காக எடுத்து வரப்படுகிறது.

ஜனாதிபதியுடன் பாக். பிரதமர் இம்ரான் பேச்சு

சியால்கோட்டில் பிரியந்த தியவதன கொல்லப்பட்டமை குறித்து இலங்கை மக்களுக்கு தமது தேசத்தின் கோபத்தையும் அவமானத்தையும் தெரிவிக்க இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்  ஐக்கிய அரபு அமீரகத்தில், இன்று (04) பேசினேன் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இலங்கையர் படுகொலை: 800 பேர் மீது வழக்கு

சியால்கோட், வசிராபாத் வீதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராகப் பணியாற்றிய இலங்கையர் ஒருவரை படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புயை பிரதான சந்தேக நபரைக் கைது செய்துள்ள பாகிஸ்தானின் பஞ்சாப் பொலிஸார், குறைந்தது 800 பேர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

பாகிஸ்தான் கைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த இலங்கைத் தொழிலாளரான பிரியந்த குமார என்பவர் மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்யப்பட்டதை எண்ணி நான் வருந்துகிறேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சீன உரக் கப்பலின் அதிரடி முடிவு

இலங்கை அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட ஹிப்போ ஸ்பிரிட் என்ற சீன உரக் கப்பல், நடுவர் மன்றத்தை நாடப்போவதாக கூறி இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேறி, சிங்கப்பூருக்குச் சென்றுள்ளது.

இது போன்ற தலைவர்கள் எமக்கு தற்போதும் வேண்டும்

பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக

இருந்த போது, சென்னை தாம்பரம்

குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும்

இலங்கை இராணுவம் கொடூரமானது’

இலங்கை இராணுவத்தினர் தன்னுடைய நாட்டு மக்களையே கொலைசெய்யும் அளவிற்கு கொடூரமானர்கள் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.