சாதித்துக்காட்டிய சந்திரயான் 3

சந்திரயான் 3 ‘விக்ரம்’ தரையிறங்கிக் கலம், ஓகஸ்ட் 23 அன்று நிலவில் பத்திரமாகத் தரையிறங்கியது; அதன் வயிற்றில் இருக்கும் ‘பிரக்யான்’ உலாவிக் கலம் வெளிவந்து ஒளிப்படங்களை எடுத்து அனுப்ப உள்ளது.

கவனயீர்ப்பு பேரணி

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரி கவனயீர்ப்பு பேரணியும் மனுகையளிப்பு நடவடிக்கையும் வியாழக்கிழமை (24 )முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கையும் சீண்டிப் பார்த்தலும்

இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்லுக்கு முன்னர், முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரம், நாக்கூசும் அளவுக்கு முன்னெடுக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயம். அதற்குப் பின்னர், ஒவ்வொரு செயற்பாடும் பொய்ப்பிக்கப்பட்டன.

ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும், 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்தார்.

பெரும் சம்பள நிலுவையுடன் நாடு திரும்பிய பெண்

அண்மைக்கால வரலாற்றில் பாரிய சம்பள நிலுவையான இலங்கை பெறுமதியில் 25,10,400  ( 2400 குவைத் தினார்கள்) ரூபாவை பெற்றுக் கொண்ட இலங்கைப் பெண் ஒருவர் குவைத்திலிருந்து நாடு திரும்பியுள்ளார்.

மீண்டும் சேவையில் நெடுந்தீவு குமுதினி படகு

நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான குமுதினிப் படகு இன்று வியாழக்கிழமை (24) முதல் மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.

லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10ம் திகதி ரஷியா விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தை நாளை (21)  நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிட்டு இருந்தது.  கடந்த 17ம் திகதி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் ரஷிய விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது. தொடர்ந்து படிப்படியாக சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடந்து வந்தன.

நல்லூரில் பால் தேநீர் 200 ரூபாய்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள சைவ உணவகத்தில்  ஒரு கோப்பை பால் தேநீர்  200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா வினை முன்னிட்டு திருநெல்வேலியில் அமைந்துள்ள  சைவ உணவகம் ஒன்று நல்லூர் ஆலயத்திற்கு அருகில் தனது கிளை நிறுவனம் ஒன்றினை   ஆரம்பித்திருந்தது.

20 வருடங்களாக உயராத எம்.பிக்களின் சம்பளங்கள்?

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் கடந்த 20 வருடங்களாக உயர்த்தப்படவில்லையெனக் கூறிய இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார, 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வரியில்லாத வாகனங்களை இறக்குமதி செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாக ஊடகங்களில் வெளியாகிய செய்தியில் உண்மையில்லை எனவும் தெரிவித்தார்.  

கடுமையான வெப்பநிலை குறித்த எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் அதி வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த  இடங்களில், மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை’ நிலை வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு நாளை பிற்பகல் 2.30 மணி வரை அமலில் இருக்கும்.