காலம் மறக்காத காவிய நடிகர்!

திரைப்பட வாழ்க்கையில், ‘சக்சஸ்’ என்ற வார்த்தையை பேசி, தடம் பதித்து, தன் வாழ்நாள் முழுவதும் வெற்றிப்பயணம் மேற்கொண்டு, தமிழகம் தாண்டியும் லட்சக்கணக்கான ரசிகர்களை கட்டுக் குள் வைத்திருந்தவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.வி.சி.கணேசமூர்த்தி என்ற சிவாஜி கணேசன் 1.1.1928ல் பிறந்தார். 73 ஆண்டுகள் வாழ்ந்ததில், சினிமாவும், ரசிகர்களும் தான் அவர் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்த விஷயங்கள். 1952ல் பராசக்தி திரைப்படத்தில் துவங்கி காதல், வீரம், சோகம் என அனைத்து வகை முகபாவங்களிலும் தனி முத்திரை பதித்த முன்னோடி.”தன்னுடைய கைவிரல் அசைவு மூலம் நம்மையெல்லாம் கவர்ந்து சினிமா பார்க்கும் பழக்கம் இல்லாத என்னையும் பார்க்கத் துாண்டிவிட்டவர் சிவாஜி,” என ராஜாஜியும், “சிவாஜியை மிஞ்சிய ஒருவரை பார்ப்பது அரிது,” என நேருவும், “சிவாஜி போன்ற கலைஞர்கள் பிறந்திருப்பது இந்நாடு செய்த தவப்பயன்,” என இந்திராவும் அவருக்கு புகழாரம் சூட்டினர்.நவரச திலகம், கலைகுரிசில், பத்மஸ்ரீ, சிம்மக்குரல் என்ற பட்டங்களை பெற்ற ஒரே நடிகர் இவராக தான் இருக்க முடியும்.

(“காலம் மறக்காத காவிய நடிகர்!” தொடர்ந்து வாசிக்க…)

இளைஞர்களுக்கு வழிகாட்டிய இருவர்

இருக்கும் வரை இருமிவிட்டு, இறந்தபின்னே இடுகாட்டுக் கரையான்களுக்கு இரையாகி மறையும் மனிதர்களுக்கு மத்தியில், வரலாறாகவே வாழ்ந்து விட்டுப் போகிற மனிதர்கள்
உன்னதமானவர்களாய் உலகத்தாரால் மதிக்கப்படுகிறார்கள். அவர்களின் விழிகள் வழிகாட்டும் மொழிகளாய் மற்றவர்களுக்கு அனுதினமும் அறிவுரைகளைத் தந்துகொண்டே இருக்கின்றன. சங்கடங்கள் சாமரம் வீசினாலும் அவர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை.
காந்தியும், காமராஜரும் சிரமத்தின் மீதேறி சிகரத்தை அடைந்த மகத்தான வாழ்ந்துகாட்டிகள். எளிமையான, பயன்மிகுந்த வாழ்க்கையால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள்.உலகப் போர்களால் உருக்குலைந்துபோன உலகிற்கு அகிம்சை என்கிற அமுதத்தை அள்ளித்தந்த வள்ளல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திஜியும், காந்திய நெறியில் வாழ்ந்து, காந்தியாகவே வாழ்ந்து காந்தி ஜெயந்தி அன்றே கண்ணயர்ந்த கர்மவீரர் காமராஜரும் இன்றைய இளையோரின் இணையற்ற வழிகாட்டிகள்.

(“இளைஞர்களுக்கு வழிகாட்டிய இருவர்” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத MP க்கள்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 35 பேர் பல வருடங்களாக தொண்டர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாவை ஊதியமாக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று கடந்த 2 வருடங்களாக வழங்கி வந்தது. இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன்னர் இவர்களின் ஒப்பந்த காலம் முடிவடைந்தது. அப்போது இவர்கள் தமக்கு நிரந்தர நியமனம் பெற்றுத் தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அது தேர்தல் காலம் என்பதால் வேட்பாளர்களான ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், இ.அங்கஜன், ம.விஜயகலா ஆகியோர் அவர்களின் போராட்டத்தில் தலையிட்டு தீர்வு பெற்றுத் தருகிறோம் என வாக்குறுதி அளித்தனர். அத்துடன் அவர்கள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி தொண்டர்களுக்கு 3 மாதங்கள் தற்காலிக பணி நீடிப்பும் பெற்றுக் கொடுத்தனர். இந்நிலையில் அந்த பணி நீடிப்புக் காலம் இன்றுடன் நிறைவுபெறுகிறது. இந்நிலையில் தமக்கு நிலையான பதவி பெற்றுத் தருமாறு தமக்கு வாக்குறுதி அளித்து இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சராகவும் இருப்பவர்களின் அலுவலகங்களுக்கு தொண்டர்கள் அலைகின்றனர். எனினும் அவர்களுக்கு இதுவரை எவரும் உரிய பதிலை தெரிவிக்காது இழுத்தடித்து வருகின்றனர் என பாதிக்கப்பட்ட தொண்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இவர்கள் பணிகளை இழப்பதால் வைத்தியசாலையில் ஊழியர் பற்றாக்குறை ஏற்படும் அபாய நிலையும் உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (இறுதி)

(மாதவன் சஞ்சயன்)

பிரித்தானியா சுதந்திரம் தந்த பின் தொடர்ந்து வந்த அரசுகளின், தமிழர் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகள் தான் முரண்பாட்டின் ஆரம்பம். இரு தரப்பு தலைவர்களும் தமது வாக்கு அரசியலை செய்து இன விரோதத்தை வளர்த்து விட்டனர். அதே வேளை பெரும்பான்மை இனத்துள்ளும் பொருளாதார ஏற்றத்தாழ்வு புகையத்தொடங்கி அது 1971ல் படித்தவேலையற்ற தென்னிலங்கை இளைஞர்களின் ஆயுத புரட்சிக்கு வித்திட்டது. அதே காலத்தில் கொண்டு வரப்பட்ட தரப்படுத்தல் முறை தமது படிப்பை, தம் எதிர்காலத்தை பாதிக்கும் செயல் என்ற பயம் யாழ் மாவட்ட மாணவரை, அரசை எதிர்த்துப் போராட தூண்டியது.

(“எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (இறுதி)” தொடர்ந்து வாசிக்க…)

ஜெனீவா பயணங்கள்……..!

(சாகரன்)

இப்போது எல்லாம் ஜெனிவாவிற்கு பயணமாதல் என்பது 1970 களில் வெளிநாட்டிற்கு மேல் படிப்பிற்காக பயணமானார் என்று தினகரன் பத்திரிகையில் வரும் விளம்பரச் செய்திகள் போல் ஆகிவிட்டது. இலங்கை தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அரசியல் உரிமை மறுப்புக்கள் என்பனவற்றிற்கு தீர்வைப் பெறும் நடவடிக்கைக்காக பயணம் என்பதை விட ஒரு வகையில் பிரபல்யம் தேடும், பொழுதுபோக்கும் செயற்பாடுகளை ஒத்ததாகவே இப் பயணங்கள் அமைகின்றன என்பது வருத்தத்திற்குரியது. இலங்கையில் நடைபெற்றது இனப்பாகுபாடும், இதனைத் தொடர்ந்த இன ஒழிப்பும் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களுக்கு நாம் 1958 தொடக்கம் நடைபெற்று வந்த கலவரம் தொடக்கம் இறுதியாக நடைபெற்ற 1983 வரையிலான கலவரங்கள் வரை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுவவதன் மூலமே இலங்கையில் தமிழ் பேசும் சிறுபான்மையின் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக பாகுபடுதப்பட்டார்கள், இதனைத் தொடர்ந்து இல்லாமல் செய்வதற்கான செயற்பாடுகளில் பேரினவாத அரசுகள் முயன்றன என்பதை நிரூபிக்க முடியும். கூடவே தமிழ் பேசும் மக்களுக்கான தொடர்சியான பாரம்பரிய பிரதேசம் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் இல்லாது ஒழிக்கப்டுவதையும், உரிமைகள் வழங்குவதில் பெரும்பான்மை மக்களை முதன்மைப்படுத்தி பாகுபாடுகள் காட்டப்பட்டு வருவதையும் புள்ளிவிபரங்களுடன் காட்ட வேண்டும். இதற்கு பலம் சேர்க்க மட்டும் பிரபல்யப்படுத்தப்பட்ட முள்ளிவாய்கால் படுகொலையை சேர்க்கலாம். மாறாக முள்ளிவாய்காலில் மட்டும் தொங்கி நின்றால் யுத்தம் இருதரப்பினரால் புரியப்பட்ட போது மரணங்கள் நிகழும் என்ற கோதாவில் இன ஒழிப்பு, இனப்பாகுபாடு என்பவை அடிபட்டே போகும். மேலும் புலிகளை அழித்து இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இலங்கை அரசிற்கு அமெரிக்கா உட்பட சர்வதேசமும் அன்று பக்க பலமாக இருந்த நிலையில் பக்க பலமாக நின்றவர்களே இந்த யுத்தம் இனப்பாகுபாட்டின் அடிப்படையில் நடாத்தப்பட்டது என்பதில் ஒத்துவருவார்களா? அல்லது இதனைத் சீர்தூக்கிப் பார்பார்களா? என்பது ஐயமே. எனவே 60 வருடங்களுக்கு மேலாக இலங்கைத் தீவில் அரசாங்கங்கள் நடாத்திய திட்டமிட்ட கலவரங்களையும், சலுகை மறுப்புக்களையும், உரிமை மறுப்புக்களையும், எழுதப்பட்ட உடன்படிக்கைகள் கிழித்தெறியப் பட்டதையும் புள்ளிவிபரங்களுடன் எடுத்துச் செல்லுங்கள் வெற்றி எமதே. மாறாக உசுப்பேத்த அல்லது பழிவாங்க மட்டும் முள்ளிவாய்காலை மட்டும் தூக்கிபிடித்தால் ஜெனிவா பயணம் 2009 ம் ஆண்டு மே மாதத்தில் புலம்பெயர் தேசம் எங்கும் பிரபாகரன் படத்துடனும், புலிக் கொடியுடனும் வீதிகளில் மக்களை இறக்கி கூச்சல் இட்டும் பிரபாகரனக் காப்பாற்ற முடியாமல் போனது போலவே அமைந்து விடும். பிரபாகரனை நேசித்தவர்களின் வலி என்பதை விட இலங்கையில் வாழும் உரிமை மறுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் உரிமை முக்கியமானது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

அமெரிக்காவுக்கு ஏன் போனேன் – ஜனாதிபதி மகன்

அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டுக்கு, தான் ஏன் போனேன் என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன, தன்னுடைய முகப்புத்தகத்தில் விளக்கமளித்துள்ளார். இந்த மாநாட்டுக்கு அவர், சென்றமை தொடர்பில் ஊடகங்களில் பல்வேறான கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன. அதுமற்றுமன்றி எதிர்மறையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர், தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம், இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு தன்னுடைய தாய்க்கு அழைப்பிதழ் வந்துள்ளது. அவரால், இந்த மாநாட்டில் பங்கேற்க முடியாமையால், அந்த சந்தர்ப்பம் தனக்கு கிடைத்தது. அதில், புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகள் என்ற தொனிப்பொருளில் இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட மாநாட்டில் பங்கேற்பதற்கு தனக்கு சந்தர்ப்பம் கிட்டியது. அதனூடாக பல முக்கியமாக நோக்கங்கள் தொடர்பில் கவனத்தை செல்லுத்த முடிந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மாநாட்டில் தான் பங்கேற்றமை எப்படி எதிர்மறையாக இருக்க முடியும் என்றும் அவர் வினவியுள்ளார். எவ்வாறாயினும் தன்னுடைய பங்குபற்றல் தொடர்பில் கடந்த கால ஆட்சியுடன் ஒப்பிடவேண்டாம் என்றும் அதுவும் தன்னுடைய குடும்பமும் நேரெதிரே வேறுபட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும் தன்னுடைய பங்குபற்றல் நாட்டுக்கு சாதகமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2016இல் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் – சம்பந்தன்

 

சம்பந்தன் தேர்தல் காலத்தில் ஒரு விடயத்தை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்திருக்கின்றார். அதாவது, 2016இல் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். அப்படியொரு நல்ல தீர்விற்காகத்தான் அவர் ரணில் விக்ரமசிங்கவின் முன்னால் அமைதி காக்கின்றாரா? ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள், பிச்சினைகளை கையாளும் வகையிலான தீர்வு ஒன்றிக்காகவே தன்னுடைய அரசு முயற்சிப்பதாக ரணில் குறிப்பிட்டிருக்கின்றார். அதனையும் புதுடில்லியில் வைத்துத்தான் அவர் கூறியிருக்கின்றார். ஆனால், இன்றுவரை புதுடில்லியில் வைத்து நாங்கள் தமிழ் மக்களின் சார்பில் எதனை எதிர்பார்க்கிறோம். இந்தியாவிடமிருந்து எதனை எதிர்பார்க்கிறோம் என்பதை ஆணித்தரமான சொல்லும் ஆற்றல் இன்னும் தமிழ் மிதவாத தலைமைகளுக்கு வரவில்லை. இந்திய – இலங்கை ஒப்பந்த காலத்தில் இந்திய இராஜதந்திரிகளைச் சந்தித்த அனுபவம் பற்றி ஒருவர் குறிப்பிடும் போது, அவர்களில் ஒருவர், எங்களுடைய மிதவாத தலைவர்களின் ஆளுமை தொடர்பில் இவ்வாறு கூறினாராம்: எங்களுடன் பேசுகின்ற போது, உங்களின் தலைவர்கள் தங்களின் தேவை என்ன என்பதை எங்களிடம் சொல்வதைவிட்டுவிட்டு, ஏதாவது பாத்துச் செய்யுங்கள் (Do something) என்கின்றனர். அப்படியல்ல நீங்கள் எங்களிடம் எதனை எதிர்பார்க்கின்றீர்கள் என்று தெளிவாக குறிப்பிட்டால்தான், நாங்கள் எங்களின் எல்லையை உங்களுக்குச் சொல்லலாம் என்று, நாங்கள் திருப்பிச் சொன்னலோ, உங்களின் தலைவர்களோ மீண்டும், நீங்கள் ஏதாவது பார்த்துச் செய்யுங்கள் என்றே கூறுவர். இந்த ஏதாவது பார்த்துச் செய்யுங்கள் என்பதுதான் இனியும் தொடரப்போகின்றது என்றால், இறுதியாக இந்தியாவும், அமெரிக்காவும் ஏதாவது பார்த்துச் செய்யும். அவர்கள் செய்யும் போது தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வும் நிச்சயமாக கிடைக்கும். ஒருவேளை அந்தத் தீர்வு 2016 இற்குள்ளேயே கிடைக்கலாம்.

(Jathi Jathindra)

கனடாவின் சுமந்திரன் இலங்கை அமெரிக்க பிரதிநிதியாக…..!

இன்று கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்திய சுமந்திரனின் கூட்டம் பெரிய சிவன் ஆலயத்தில் மாலை நடந்தது. நிறைந்த கேள்விகளோடு விரைந்து சென்றேன். குறித்த நேரத்திற்கு நிகழ்வு ஆரம்பமானது. ஆனால் குறித்து சென்ற கேள்விகள் ஊமையாய் உறங்கிய அழுத்தம் மனதில் கொந்தளிப்பை உருவாக்கியது. கனடா வந்த சுமந்தரனிடம் கேள்வி கேட்க சென்ற என் போன்ற மக்களை குரல் எழுப்பி கேள்வி கேட்க விடாமல் துண்டெழுதி கேள்வி கேட்க வைத்து, படித்தது பாதி படிக்காதது பாதி, கேள்வியை திரிபு படுத்தி படித்தது பாதி, என நுனிப் புல் மேய்ந்து சாதுரியமாக பதில் என்ற பெயரில் எதையோ சொல்லி தட்டிக் கழித்து தப்பித்தார் சுமந்திரன்.

(“கனடாவின் சுமந்திரன் இலங்கை அமெரிக்க பிரதிநிதியாக…..!” தொடர்ந்து வாசிக்க…)

மோடியின் தோல்விகள்

 

சிலிக்கான் வேலியில் மோடி கிளப்பும் விளம்பரப் புழுதி, நாளிதழ்களை கறையாக்கி வருகிறது. கறையும், புழுதியும் நல்லதல்ல என்றாலும் மோடி ஆண்டையின் காலில் விழுந்து கிடக்கும் ஊடகங்கள் சலிக்காமல் பஜனையை கிளப்பி வருகிறார்கள். மோடியை புகைப்படம் பிடிப்பதிலிருந்து, ஆட்களை அழைத்து வருவது, உள்ளூர் சில்லறை மற்றும் மொத்த விற்பனை பிரமுகர்களை காட்டுவது, வசனங்களை தயாரிப்பது, ஊடகங்களில் மானே தேனே போட்டு எழுதிக் கொடுப்பவது வரை பெரும்படையே அங்கும் இங்கும் வேலை செய்கிறது. ஆனாலும் ஒரு குற்றவாளியை இப்படி வாஷிங்டன் சென்ட் போட்டு மறைக்க முடியுமா?

(“மோடியின் தோல்விகள்” தொடர்ந்து வாசிக்க…)

சர்வதேச விசாரணை தொடர்பில் சரியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துமா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை அதன் பின்னர் அந்த அறிக்கை தொடர்பில் அமெரிக்க அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவு என்பன தொடர்பில் சரியான நிலைப்பாடொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்த வேண்டுமென அவர்களுக்கு வாக்களித்த மக்கள் எதிர்பார்க்கிறார்கள் – என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட பிரதம அமைப்பாளருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தெரிவித்தள்ளார்.

(“சர்வதேச விசாரணை தொடர்பில் சரியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துமா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?” தொடர்ந்து வாசிக்க…)