ஜனாதிபதிக்கு ஹிருணிகா அவசர கடிதம்

மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஹிருணிகா பிரேமச்சந்திர கடிதம் அனுப்பியுள்ளார். பௌத்த மதத்தின்படி, துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது, ஆனால் நாட்டின் தற்போதைய சட்டத்தை நிலைநிறுத்துவது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று (25) அதிகாலை 4 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு முன்னரை போன்றே அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகள் மாகாணங்களுக்கு இடையில் மாத்திரமே செயற்படும். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாகாண எல்லைகளை தாண்டி அத்தியாவசிய சேவைகளுக்காக சில பொது போக்குவரத்துக்களை ஈடுபடுத்துவது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

‘பசுமை புரட்சியினூடான வறுமை ஒழிப்பு’

பின்தங்கிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தினூடாக, கிழக்கு மாகாணத்தில் பசுமை பொருளாதார புரட்சியினூடான வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தில் வீட்டுத் தோட்ட கற்றாழை பயிர் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண திட்டப் பணிப்பாளர் எம்.ஏ. ஆஸாத் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகள் 16 பேர் விடுதலை

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 16 அரசியல் கைதிகள், இன்று (24) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு பூராகவுமுள்ள சிறைகளிலிருந்து 93 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 தமிழ் அரசியல் கைதிகளும் இன்று (24) விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம் பாசத்துக்குரிய தோழன், ஈழ மக்களின் நண்பன்….

(சாகரன்)

ஈழ மக்களுக்காக ஓடி ஓடி உழைத்த தருணங்களைச் சொல்வதா இந்திய அரசியலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய பொதுவுடமை கட்சி ஆகியவற்றுடன் இனைந்து மக்களின் பிரச்சினைக்காக களமாடியதைச் சொல்வதா சங்கமத்தில் ஜனநாயக சக்திகளை கட்சி பேதமின்றி இணைத்து பல விவாதங்களை நடத்தியதைச் சொல்வதா பழங்குடி மக்களைத் தேடிச்சென்று அவர்களின் தேவையறிந்து உதவியதைச் சொல்வதா? இவ்வாறு அவரை நினைவு கூறுகின்றார் ஒரு தோழர்….

வாழ்க்கை காலத்தில்கரைகிறது…..

அன்பு என்று அனைவராலும் அழைக்கப்படும் சங்கமம்தோழர் அன்பரசு அவர்கள் இன்று அதிகாலை 4-30 மணிக்குகொரானா கொடுந்தொற்று காரணமாக காலமானார். கடுமையான பாதிப்பைஏற்படுத்தியிருக்கும் துயரம் மிக்க செய்தி.

இந்திய சினிமாவும் ஈழத்தமிழர்களும்

(என்.கே. அஷோக்பரன்)

அண்மையில் வௌிவந்த, இரண்டு இந்திய சலனச் சித்திரப் படைப்புகள், புலத்தில் வாழும், அதைவிடக் குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோட்டை ரயில் நிலையம் முன்பாக பதற்றம்

கோட்டை ரயில் நிலையம் முன்பாக பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொலிஸாருக்கும், பல்கலைக்கழக மாணவர்கள் அடங்கிய குழுவினருக்கும் இடையிலேயே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. கொத்தலாவல தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்த ஆர்ப்பாட்டத்தை கலைத்த பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்திருந்த பதாதைகளை தம்வசப்படுத்தினர். பல்கலைக்கழக மாணவர்கள் சிலரையும் சிறைப்பிடித்தனர். இதனையடுத்தே, ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

தோற்றும் விலகல் சுற்றில் வேல்ஸ்

யூரோ கிண்ணத் தொடரின் விலகல் முறையிலான சுற்றுக்கு வேல்ஸ் தகுதி பெற்றுள்ளது. இத்தாலியில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் தோற்றிருந்தது. இத்தாலி சார்பாகப் பெறப்பட்ட கோலை மட்டியோ பெஸ்ஸினா பெற்றிருந்தார்.

‘முழந்தாலிடல் விவகாரம்’: விசாரணைகள் ஆரம்பம்

ஏறாவூர் பிரதேசத்தில் நேற்றைய தினம், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, வீடுகளை விட்டு வெளியே சென்ற சிலர், இராணுவத்தினரால் முழந்தாழிடப்பட்ட சம்பவம் தொடர்பில், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஆலோசனைக்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இதனுடன் தொடர்புடைய, இராணுவ வீரர்கள் கடமைகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.