வாழ்க்கை காலத்தில்கரைகிறது…..

40 ஆண்டுகால நட்பை கொரானா கொடுந்தொற்று கொண்டு போன செய்தி. அன்பரசு அவர்கள் வாழ்க்கை மீது மாளாப் பற்று கொண்ட ஒரு உயிரோட்டமான ஆளுமை. நண்பர் அன்பரசு அவர்கள் பாரம்பரியம் மிக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் குடும்பத்தைச் சேர்ந்தவர்.வழக்குரைஞர் S, ராதாகிருஷ்ணன் அவர்களின் இளவல்.

பல்வேறு சமூக அரசியல் தளத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த சமூக செயற்பாட்டாளர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் மன்றம், கலாமன்றம், இந்திய சோவியத் நட்புறவுக் கழகம், இந்திய நட்புறவு கலாச்சாரக் கழகம், ஈழமக்கள் நட்புறவுக் கழகம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்பூபேஷ்குப்தா நினைவு மன்றம் ஆகிய அமைப்புகளில் தீவிரமாக பணியாற்றியவர்.

ஒரு கருத்துப் பரிமாற்றக் களமானசங்கமம் அமைப்பின் நிறுவன உறுப்பினர், செயற்பாட்டாளர். அன்பரசு அவர்கள் ஒரு சிறந்த கல்வியாளர். ப்ரிஸ்க் மெட்ரிகுலேசன் என்ற மழலையர்பள்ளியை நிறுவி கடந்த30 ஆண்டுகளாக அதன் தாளாளராக இருந்து நடத்தி வந்தவர். டெக்ஸ்டைல் உதிரி பாகங்களை செப்பனிடும் தொழிற் பட்டறை நடத்தி வந்ததொழிலதிபர். இலக்கியத்தில் ஈடுபாடு நிறைந்தவர். தீவிர வாசிப்பாளர். வெளிப்படையாக பேசும் கூர்மையான விமர்சகர்.

அன்பரசு அவர்கள் விடாமுயற்சியும் வெற்றிக்காக எதையும் விட்டுக் கொடுக்காத இயல்பும் கொண்ட Trier! அரசியல் சமூக கலை இலக்கிய நிகழ்வுகள் எதுவாக இருப்பினும் அவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் துடிப்பு மிக்கசெயற்பாட்டாளர். மொத்தத்தில் வாழ்க்கையை நேசிக்கும் உயிர்ப்புள்ளரசிகர் அவர். அவரது மறைவால் பேரிழப்பிற்கு உள்ளாகியிருக்கும்அவரதுமனைவி திருமதி மேரி அன்பு மகள் வானதிமகன் பார்த்திபன்குடும்பம்பத்தினர் மற்றும்இயக்கத் தோழர்களுக்குஎதைச் சொல்லி ஆற்றுப் படுத்துவது. வாழ்க்கை …….காலத்தில் கரைகிறது. வேறு என்ன சொல்ல…….

(வில்வம்)