இன்று யாழ்.பல்கலைகழக கைலாசபதி கலையரங்கில் யாழப்பாண சர்வதேச சினிமா விழா அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. தென்னிலங்கை , இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிருந்து பலர் பங்குகொண்டனர். அரங்கு நிறைந்த பர்வையளர்களுடன் நீண்டகாலத் திற்குப் பிறகு பல்கலைக்கழகத்தைப் பார்க்க சந்தோசமாக இருந்தது. விழா அழகாகவும் எளிமையாகவும் நடந்தது. முதல் நாள் காட்சியாக PHOENIX எனும் ஜெர்மானிய திரைப்படம் காண்பிக்கப்பட்டது.இவ்விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக முன்னாள் விரிவுரையாளரும் ஈபிஆர்எல்எவ் முக்கியஸ்தரும் முன்னாள் வடக்கு கிழக்கு மகாண சபை முதல்வரும் கலந்துகொண்டார். 2009 இல் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் ஏற்பட்டுள்ள ஜனநாயக இடவெளி வரதராஜப்பெருமாள் போன்றவர்களையும் யாழ் பல்கலைக்கழகம் வரை சுதந்திரமாக நடமாட வைத்திருப்பது இங்கு கவனிக்கத் தக்கது.
Author: ஆசிரியர்
சி என் அண்ணாதுரை அவர்களின் பிறந்த நாள்!
தனக்கு இருந்த நாவன்மையால், அடுக்கு மொழி அலங்கார பேச்சில் பேசி, ஒத்து மொத்த தமிழனையும் தன் மாயையில் விழ வைத்து , அவர்களை சிந்திக்க தெரியாத ஜடங்களாக ஆக்கியவரின் பிறந்த நாள்!
உன் முகத்தை மட்டும் காட்டு! முப்பது லட்சம் ஓட்டு விழும் என்று நடிகரை அழைத்து, தமிழனை விசில் அடிச்சான் குஞ்சுகளாக மாற்றியவரின் பிறந்த நாள்!
மொழி பற்று என்ற பெயரில், கல்லூரி மாணவர்களை தூண்டி, ஆர்பாட்டம், கலவரம் செய்வித்து, அதன் மூலம் அரசியல் லாபம் பெற்று, இன்று வரை ஓரளவும் ஹிந்தி மொழி அறியாதவர்களாக தமிழ் மக்களை ஆக்கியவரின் பிறந்த நாள்!
அடைந்தால் திராவிட நாடு! இல்லையெனில் சுடுகாடு என்று அடுக்கு மொழியில் அலங்கார மாக பேசி, இன்று வரை வடக்கு தெற்கு என்ற மாநில, மொழி வெறியில் தமிழன் திறிய காரணமாக இருந்தவரின் பிறந்த நாள்!
(“சி என் அண்ணாதுரை அவர்களின் பிறந்த நாள்!” தொடர்ந்து வாசிக்க…)
‘சுமந்திர கலகம்’
(ப.தெய்வீகன்)
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமது ஏகபோக பலத்தை தமிழ் மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்ட தமிழ்க் கூட்டமைப்பு எனப்படும் நான்கு கட்சிகளின் கூட்டணியில் தனியொரு கட்சியின் ஆதிக்கம் எனப்படுவது எதிர்காலத்தில் செல்வாக்கு செலுத்தப்போகின்றதா என்பதை பரிசோதிக்கும் நிகழ்வொன்று அண்மையில் நடைபெற்று அதற்கு விடையும் காணப்பட்டுவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் தமிழரசு கட்சியின் ஆதிக்கமும் முக்கியமாக சம்பந்தன் – சுமந்திரன் கூட்டுச் செல்வாக்கும் அபரிமிதமாக காணப்படுவதாக ஒரு பாரம்பரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருவது வழக்கம். கூட்டமைப்பில் உள்ளவர்கள் அதனை அவ்வப்போது மூடிமறைத்தாலும் நடந்து முடிந்த பொதுத் தேர்தலின்போது சம்பந்தன் மேற்கொண்ட பிரசாரங்களின்போதும் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் தேசியப் பட்டியல் உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் நகர்வுகளின்போதும் இந்த விவகாரம் மிகவும் வெளிப்படையாகத் தெரிந்த உண்மையானது.
மன்னார் ஆயருக்கு நடந்தது என்ன??? வெளி வந்தது உண்மை!
மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் மன்னார் ஆயருக்கு கொடுத்த தேனீரை அருந்திய பின்னரே அவர் சுவயீனமுற்றுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழ் தேசிய போராட்ட வாழ்வில் மன்னார் ஆயரின் பங்கு என்ன என்பதனை அனைத்து தமிழ் மக்களும் நன்கு அறிந்துள்ளதோடு,மன்னார் ஆயரின் பலம் தொடர்பில் சர்வதேச நாடுகளும் புரிந்து கொண்டுள்ளனர். யுத்தம் முடிவுற்ற பின்பு இலங்கையில் இடம் பெற்றது மனிதாபிமான பணிகளா? அல்லது மனித படுகொலையா? என்பது தொடர்பில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு தெரிவித்திருந்தார்.
திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை என்றும், யுத்தம் நடந்து முடிந்த பின் தமிழ் மக்களை அப்போதைய மஹிந்த அரசாங்கம் கொடுமைப்படுத்துகின்றது என்று உலகிற்கு எடுத்துக்கூறியிருந்தார்.
(“மன்னார் ஆயருக்கு நடந்தது என்ன??? வெளி வந்தது உண்மை!” தொடர்ந்து வாசிக்க…)
இந்தியாவுடன் நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களை மீள் மின்னேற்றலாம்
வாகனங்களை மீள் மின்னேற்றம் செய்வதற்கு அவசியமான உபகரணங்கள் மற்றும் மின்னேற்றல் கட்டமைப்பை அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஸ்தாபிக்கத் திட்டமிட்டுள்ளதாக கனியவள மற்றும் எரிவாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். மின் பாவனையை மாத்திரம் கொண்ட வாகனங்களுக்கு தற்போது அதிக கேள்வி நிலவுவதால் இந்த திட்டம் அமுல்படுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். மின்னை மீள் நிரப்பும் நிலையங்களின் உபகரண கட்டமைப்பு நாடளாவிய ரீதியாக இல்லாமையினால் நுகர்வோர் நெருக்கடியை எதிர்நோக்குவதாக அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, எதிர்காலத்தில் மோட்டார்சைக்கிளின் பாவனையை குறைத்து, துவிச்சக்கரவண்டியின் பாவனையை அதிகரிக்குமாறு அமைச்சர் சந்திம வீரக்கொடி பரிந்துரை செய்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் விசாரிக்கப்பட வேண்டும்
(சாகரன்)
ஐநாவின் மனித உரிமைக்கான 40 வது கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. என்றும் போல் இம்முறையும் இலங்கைத் தமிழர்கள் இலவுகாத்த கிளி போல் மீண்டும் காத்திருக்கின்றனர். மனித உரிமை சபையில் ‘தமிழீழத்தை” அமெரிக்கா பெற்றுத் தரும் என்று. இலங்கையில் ஏற்பட்டிருக்கும் புதிய அரசும், அமெரிக்காவின் இந்த அரசு தனக்கு சார்பாக செயற்படும் என்ற எதிர்பார்ப்புகளும் பிழைக்காத வரைக்கும் மகிந்தாவை கழுவில் ஏற்றுதல் போன்ற வெருட்டல்களை இந்த மனித உரிமை மகாநாடுகளில் இருந்து எதிர்பார்க்க முடியாது. இது மகிந்தாவிற்கான கழுவில் ஏற்றும் பொறி முறை அல்ல சீனாவின் இலங்கைப் பிரசன்னத்திற்கு அமெரிக்கா கொடுக்க இருந்த தண்டனை.
(“இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் விசாரிக்கப்பட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)
சம்பூரிலிருந்து கொழும்புக்கு நேரடி பஸ் சேவை
சம்பூரிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ் சேவை 30 வருடங்களின் பின்னர் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டது. சம்பூர் கட்டைப்பறிச்சான் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வினையடுத்து பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது. மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் நேற்று முதல் சம்பூர் கொழும்பு சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த பஸ், சம்பூரிலிருந்து இரவு பத்துமணிக்கு புறப்பட்டு அதிகாலை காலை ஆறுமணிக்கு கொழும்பு கோட்டை பிரதான பஸ் தரிப்பிடத்தினை வந்தடைந்ததன் பின்னர் அங்கிருந்து வௌ்ளவத்தையில் பயணத்தை நிறைவு செய்யவுள்ளது.
யுனியன் நாடுகள் இதனைச் சிந்துக்குமா…?
(சாகரன்)
இவ்வளவு நடந்த பின்பும் அகதிகள் பிரச்சனை என்று மட்டும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கவனத்தைச் செலுத்தி தமது நாட்டிற்குள் அகதிகளை வர விடாமல் எப்படித் தடுப்பது தவிர்பது என்ற வட்டத்திற்குள் மட்டும் சிந்திக்கின்றன. மாறாக இந்த அகதிகள் எவ்வாறு உருவானார்கள் என்பதை இவர்கள் சிந்திப்பதை விரும்பவில்லை. அப்படி சிந்தித்து போரை நிறுத்தாத வரைக்கும் அகதிகள் பிரச்சனை பெருக்கெடுத்து ஓடி அணையை உடைத்தெறியும். இதன் பின்பு யூனியன்கள் பாடங்கள் கற்பர். நான்கு வருடத்திற்கு முன்பு சிரிய மக்கள் வாழ்ந்த அமைதி வாழ்வை உள்ளுர் கலகக்காரர்களுக்கு ‘உதவி’கள் செய்து ஊக்குவித்து கலகத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் யார் என்பதை உலகம் அறியும். இதன் தொடர்சியாக மதத்தை தூக்கிப் பிடிக்கும் தீவிரவாதிகள் சிரியாவை பங்கு போடப் புறப்பட்டதும் புதிதாக அமெரிக்காவால் ஆரம்பிக்கப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இவர்கள் யாவரையும் புறம் தள்ளி முன்னேற இந்தக் காட்டாற்றை தடுக்க முடியாமல் யாவரும் திணறி அல்லாவை வழிபடும் மக்களும் அவதிப்படும் நிலை ஏற்பட்டதையும் உலகம் அறியும். இன்று பன்முகத்தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தரைவழியையும் தவிர்த்து கடல் மார்க்கமாக தப்பிக்க முயலும் சிரிய மக்கள் தமது உறவுகளை கடலுக்கு தீனியாக போடவேண்டிய துர்பாக்கியத்திலுள்ளது கொடுமையிலும் கொடுமை. இதிலும் தப்பியவர்கள் தஞ்சம் கேட்க யூனியன்கள் தாங்காது தத்தளிப்பது புதிய நிலமைகளை ஏற்படுத்துமா என்பது போரை நிறுத்தி அகதி வாழ்வைத் தடுக்கும் பொறிமுறையில் தங்கியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக, மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட முழுமையான விசாரணையின் அறிக்கையை, நாளைய தினம் (புதன்கிழமை) கையளிக்கவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று ஆரம்பமான, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 30ஆவது அமர்வினைத் தொடக்கி உரையாற்றிய போதே, அல் ஹுஸைன் இவ்வாறு தெரிவித்தார்.
(“இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள்” தொடர்ந்து வாசிக்க…)