இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,405 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 269,007 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 24,860 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,099 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 46 ஆயிரத்து 440 பேருக்கு பைசல் தடுப்பூசியின் முதலாவது ஊசி செலுத்தப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், இன்று (26) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் அவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், மன்னார் மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சமூக தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சமூக தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஓரளவு நிறைவடைந்துள்ளன என்றார்.

அதன் அடிப்படையில் இதுவரையில் 52 ஆயிரத்து 144 பேருக்கு சமூக தடுப்பூசியின் முதலாவது ஊசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்,  இதில் 46 ஆயிரத்து 440 பேருக்கு பைசல் தடுப்பூசியின் முதலாவது ஊசியினை பெற்றுக் கொண்டுள்ளனர் எனவும் 550 பேருக்கு 2ஆவது ஊசி வழங்கப்பட்டுள்ளதெனவும் கூறினார்.