கியூபா தனித்து விடப்படவில்லை: நாங்கள் இருக்கிறோம்!

உலகில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரட்சி வெற்றி பெறும். புரட்சிக்கான நம்பிக்கையின் வடிவமாக சின்னமாக இருப்பது கியூபாவும், சேகுவேராவும் என்றார். இன்றைய இளைஞர்கள் கூட தனது சட்டையிலே சேகுவேராவின் படத்தை பொறித்து, இந்த உலகத்தை மாற்றிவிட முடியும், இந்த உலகத்தை அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கக் கூடிய, சமூக நீதி இருக்கக் கூடிய உலகமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையோடு வலம் வருகிறார்கள் என்றால் அதற்கு காரணம் கியூபாவில் நடைபெற்ற புரட்சியும்தான்.

உலகிற்கே வழிகாட்டிய கியூபா

நாம் அனைவரும் கனவு காணக் கூடிய மக்களுக் கான மருத்துவம் என்பதை நிகழ்த்திக் காட்டியது கியூபா. இன்று தமிழ்நாட்டில் வீடு தேடி வந்து மருத்துவம் என்று பெருமையோடு கூறுகிறோமே, அதை பல ஆண்டுகளுக்கு முன்பே செய்து முடித்து, உலகிற்கே வழிகாட்டியது கியூபா.

மருத்துவர்கள் மக்களோடு வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்கி காட்டியது கியூபா. எதை முதன்மைப்படுத்த வேண்டுமோ, எதில் சாதிக்க வேண்டுமோ அதை கியூபா செய்து காட்டியிருக்கிறது. பொருளாதாரத் தடைகளால், ஒரு குழந்தைக்கு குடலில் ரத்தம் கசிந்து கொண்டே இருக்கிறது. அதை நிறுத்த வேண்டும் என்றால் வெளிநாட்டில் இருந்துதான் மருந்து வர வேண்டும். அந்த குழந்தை செய்த ஒரே தவறு எங்கள் நாட்டிலே பிறந்ததுதான் என்று வேதனையுடன் அலெய்டா ஒரு முறை பேட்டியில் கூறினார். கியூபாவிற்கு உதவ வேண்டும் என்று நினைக்கக் கூடிய நாடுகளை கூட தடுத்து நிறுத்தும் மிக மோசமான செயல்களை ஆதிக்க சக்திகள் மேற்கொண்டு வருகின்றன. எந்த நாடாக இருந்தாலும் மருந்து பொருட்களுக்கு தடை விதிக்கக் கூடாது என்பதுதான் மனிதாபிமானம், மனித நேயம். ஆனால் அதை கடந்து தனது ஆதிக்கம் மட்டும் தான், அதை நிலை நிறுத்துவது மட்டும்தான் முக்கியம் என்று நினைக்கக் கூடிய ஒரு நிலை இருக்கிறது. ஆனால் இங்கு வெவ்வேறு இயக்கங்களாக செயல் பட்டாலும் அனைவரும் வலியுறுத்துவது மனிதநேயத்தை தான். அதனால் கியூபாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும், அந்த மக்களோடு நாம் நிற்கிறோம் என்பதை உரக்கச் சொல்வோம் என்றார் கனிமொழி.

2 ) அடக்குமுறையில் இருந்த மக்களை விடுவிக்க போராடியவர் சேகுவேரா – – இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், உலகில் பல தலைவர்கள் மதிக்கப்படக் கூடியவர்கள். ஆனால் அதில் இருந்து சற்று வித்தியாசமாக இளைஞர் களை ஈர்க்கக்கூடிய சக்தியாக விளங்குகிறார் சேகுவேரா. 1928ஆம் ஆண்டு பிறந்து 1967ஆம் ஆண்டு கொல்லப்படுகிறார். அந்த 39 வயதிற்குள் தன்னை குறித்து உலகம் பேசும்படியான சாதனைகளை நிகழ்த்தி விட்டு சென்றிருக்கிறார். நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் மற்ற வர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மார்க்ஸ் கூறினார். அதைத்தான் சேகுவேரா தனது வாழ்க்கையில் பின்பற்றினார். உலகில் வாழும் மக்கள் எல்லாம் எந்த அடக்குமுறையும், சுரண்டல்களும் இன்றி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று போராடினார். சேகுவேரா நினைத்திருந்தால் கியூபாவில் அமைச்சராக வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கலாம். இன்னும் அதிக ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் அதை பெரிதாக கருதாமல், பாதிக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக பாடுபட்டார். அவர் தனது குழந்தைகளுக்கு எழுதிய கடிதத்தில் நீங்கள் நன்றாக படிக்க வேண்டும், நல்ல அறிவாளியாக திகழ வேண்டும், நல்ல போராளியாக இருக்க வேண்டும், எங்கு அநீதி நடைபெற்றாலும் அதற்கு எதிராக போராட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த அடிப்படை யில் அவர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், தமிழ்நாட்டு மக்கள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

3 ) மனிதநேயத்தை வெளிப்படுத்திய கியூபா

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பேரா. ஹாஜாகனி பேசுகையில், உலகின் சர்க்கரை கிண்ணமான கியூபா, ஏகாதிபத்திய நாடுகளுக்கு கசக்கி றது. அதனால்தான் அந்த நாட்டின் மீது அடக்குமுறைகளை, பொருளா தாரத் தடைகளை அமெரிக்க விதித்து வருகிறது. கடந்து போன கொரோனா உலகிற்கு நோயின் கோரத்தை மட்டும் காட்டவில்லை. கியூபாவின் ஈரத்தை, மனிதநேயத்தை காட்டியது. கொரோனா காலத்தில் பாத்திரங்களை தட்டுங்கள், விளக்குகளை ஏற்றுங்கள் என்றெல்லாம் சொன்ன அரசாக இல்லாமல், முறையாக மனிதர் உயிர்களை காத்தது கியூபா. இதில் இருந்து புரட்சியின் அருமையை உணர முடியும் என்றார் அவர்.

4 ) அம்பலமான அமெரிக்காவின் இரட்டைவேடம் – எம்.ஏ.பேபி ( சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் )

அமெரிக்காவின் மிக மிக அருகில் உள்ள சோசலிச கியூபா, உலகம் முழு வதும் உள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு உற்சாக மூட்டக்கூடிய சக்தியாக திகழ்கிறது. 1959 ஆண்டு புரட்சி வெற்றிபெற்ற முதல் கடந்த 60 ஆண்டுகளாக மனித தன்மையற்ற சட்ட விரோத பொருளாதார தடைகளை அமெரிக்க விதித்து வருகிறது. கியூபா மீதான அமெரிக்காவின் தடைகளை கண்டித்து 1990 முதல் இன்று வரை 29 முறை ஐநா பொதுச்சபையில் தீர்மானம்கொண்டு வரப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது 184 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்றன. சர்வதேச சட்ட விதிகளின் படி இந்த தடைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. இதை எதிர்த்து அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே வாக்களித்தன. 3 நாடுகள் நடுநிலை வகித்தன. அவை உக்ரைன், பிரேசில், கொலம்பியா. அடுத்தாண்டு இதே தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்த போது கொலம்பியா ஆதரித்தது. அந்த நாட்டில் இருந்த அரசு பல ஆண்டு களாக அமெரிக்காவை ஆதரித்து வந்தது. ஆனால் அந்நாட்டு மக்கள் நாம் அமெரிக்காவின் கொள்கை களுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்று கூறி ஆட்சியை மாற்றி இடது சாரிகளை தேர்வு செய்தனர். எனவே அமெரிக்கா மேலும் ஒரு கூட்டாளியை இழந்தது. கியூபா மீதான அமெரிக்கா வின் பொருளாதார தடைகளை எதிர்த்து எதிர்காலத்தில் தீர்மானம் வந்தால் மேலும் ஒரு நாட்டையும் அமெரிக்கா இழக்கும். காரணம் கடந்த காலங்க ளில் நடுநிலைமை வகித்த பிரேசில் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு லூலா தலைமையில் இடதுசாரி முற்போக்கு அரசு அமைந்துள்ளது.

காஸ்ட்ரோவை கொல்ல 634 முறை முயற்சி

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட பல காரணிகள் இருந்தாலும் கியூப புரட்சி அதில் மிக முக்கியமானது. ஏகாதிபத்தியத்திற்கு சவாலாக விளங்கும் கியூப சோசலிச அரசை கவிழ்க்க அமெரிக்கா பல முறை முயன்று தோற்றதுதான் மிச்சம். அமெரிக்காவின் சிஐஏ உளவு நிறுவனம் கியூப புரட்சியின் நாயகன் பிடல் காஸ்ட்ரோவை கொல்ல 634 முறை முயன்று தோற்றது.

கியூப புரட்சியின் தாக்கம்

1961ஆம் ஆண்டு ஆயுதம் தாங்கிய கும்பலால் கியூப அரசை கவிழ்க்க அமெரிக்கா முயன்றது. அதை பிடல்காஸ்ட்ரோவும் சேகுவேரா வும் வெற்றிகரமாக முறியடித்தனர். கியூப புரட்சியின் தாக்கத்தால் ஒட்டு மொத்த லத்தீன் அமெரிக்கா நாடுகளி லும் மத்திய அமெரிக்க நாடுகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. யாருடனும் ஒப்பிட முடியாத, சமசர மில்லாத போராளியாக சேகுவேரா திகழ்ந்தார். காரணம் அவர் கியூபாவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க நாடுகளில் முற்போக்கு அரசை அமைக்க தனது வாழ்நாளை தியாகம் செய்தவர். கியூபாவில் சோசலிச அரசை நிர்மாணிக்க அவர் தொடர்ந்து அங்கேயே இருக்க வேண்டும் என்ற பிடல் காஸ்ட்ரோ விரும்பினார். ஆனால் அவரோ, “கியூ பாவில் புரட்சியை வெற்றிகரமாக நடத்திவிட்டோம். பல லத்தீன் அமெரிக்க நாடுகள் தாங்கமுடியாத வறுமையிலும் அடக்குமுறையிலும் உள்ளன. அந்த நாடுகளில் சோசலீச சமூக அமைப்பை ஏற்படுத்த போராடும் மக்களுக்காக செல்கிறேன்’’ என்று கூறி விட்டு சென்றுவிட்டார்.

அமெரிக்காவின் இரட்டை வேடம்

கியூபா மீதான அமெரிக்காவின் மனிதத்தன்மையற்ற பொருளாதார தடை களை விலக்கிகொள்ள வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள முற்போக்கு சக்திகள் வலியுறுத்தி வருகின்றன. அந்த சக்திகளுடன் இணைந்து இந்தியாவும் அதன் ஒரு அங்கமான தமிழ்நாடும் கியூபா வுக்கு ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது. கியூபா தனித்துவிடப்பட வில்லை. நாங்கள் எப்போதும் கியூபாவுடன் இருக்கிறோம். உலகம் முழுவதும் தடையற்ற வர்த்தகம் நடைபெற கட்டுப்பாடுகளை விலக்கி கொள்ளவேண்டும் என்று ஒருபக்கம் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மறுபக்கம் சின்னஞ்சிறிய கியூபாவுக்கு எதிராக வர்த்தக தடைகளை விதித்துள்ளதோடு மற்ற நாடுகளும் அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யக்கூடாது என்று மனிதாபிமான மின்றி நிர்பந்திக்கிறது. இது அமெரிக்காவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது. உலகில் சூப்பர் பவர் நான்தான் என்று அமெரிக்கா நினைத்துக் கொண்டிருக்கிறது.

ஆசியாவில் உள்ள வியட்நாம் பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தையும் அமெரிக்க ஏகாதி பத்தியத்தையும் ஒருசேர எதிர்த்து போராடியது. அப்போது, ‘எனது பெயர், உனது பெயர் வியட்நாம்’ என்று முழங்கி னோம். இன்று, “உனது பெயர் எனது பெயர் கியூபா கியூபா ’’என்று முழங்கு வோம். கியூபா நீடூழீ வாழ்க.. வாழ்க என்றார் பேபி.

5 ) தாய் மொழியில் படித்து உயர்ந்தவர்கள்

சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், சேகுவேராவை போல் ஒரு புரட்சிகர மனிதன் இனி உலகத்திலே பிறக்க முடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால் அவ்வளவு மகத்தான மாவீரனாக வாழ்ந்தவர் சேகுவேரா. அவரை அமெரிக்க ஏகாதிபத்தியம் கைது செய்து, மறுநாளே கொடூர மாக சுட்டுக் கொன்றது. தன்னுடைய 39 வயதில் அவர் மரணித்தார். அவர் மரணமடையும் போது, அலெய்டா வுக்கு தந்தையை அடையாளம் காணக்கூடத் தெரியாது. பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சி நடத்தி, அங்கு அமைந்த ஆட்சியில் பங்கேற்றவர்தான் சேகுவேரா. அந்த ஆட்சியில் அவர் தனது இறுதிவரை நீடித்திருக்க முடியும். ஆனால் சேகுவேரா ஒரு கியூபாவை மட்டும் விடுதலை செய்தால் போதாது, ஒட்டு மொத்த கண்டத்தையும் விடுதலை செய்வதுதான் என்னுடைய பணி என்ற அடிப்படையில், அமைச்சர் பதவியை துறந்து, மீண்டும் புரட்சி நாயகராக விளங்கினார். தனது மனைவி, மகள், பிடல் காஸ்ட்ரோ என அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர் கிளம்பி வெளியே சென்று விடுகிறார். ஏனென்றால் நீங்கள் என்னை அனுமதிக்க மாட்டீர்கள் என கடிதம் எழுதிவைத்து விட்டு அந்த புரட்சிகர மான பணிக்காக செல்கிறார். சேகு வேரா என்ற பெயரே மின்சாரத்தை போல அதிர்வலையை உருவாக்கக் கூடிய பெயராக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் அவர் ஒரு கம்யூ னிஸ்டாக இருந்தார். ஏகாதியபத்தி யத்தை எதிர்த்து போராடிய போர்ப் படைத் தளபதியாக திகழ்ந்தார். அப்படிப்பட்ட புரட்சியாளரின் மகளாக அலெய்டா வந்திருக்கிறார். இங்கு ஸ்பானிஷ் மொழியில் பேசு கிறார்.

அலெய்டா மருத்துவராக இருக் கிறார். அவருடைய மகள் பொரு ளாதார பேராசிரியராக இருக்கிறார். ஆனால் அவர்களுக்கு ஆங்கிலம், இந்தி தெரியாது. ஏனென்றல் கியூபா போன்ற நாடுகளில் எல்லாவிதமான படிப்புகளையும் தாய் மொழியிலேயே படிக்க முடியும் என்ற உரிமை இருக்கி றது. ஆனால் இந்திய நாட்டில் தாய் மொழியிலேயே படித்து பட்டம் பெறுகிற வாய்ப்பு இல்லை. இங்கு சிலர் இந்தி படித்தால் இந்தியாவை ஆள முடியும் என்கிறார்கள். இன்னும் சிலர் ஆங்கிலம்தான் அறிவுக்கு மொழி என்கிறார்கள். அந்த அறிவார்ந்த மொழியை படித்தால்தான் அறிவாளி யாக முடியும் என்றும் கூறினார்கள். ஆனால் கியூபா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் தாய் மொழி யில்தான் எல்லாவற்றையும் படிக்க முடியும் என்றால், அதற்கு காரணம் தாய் மொழியில் கல்வி பயில்வதை விட வேறு எந்த மொழியில் கல்வி பயின்றாலும் அது சிறப்பாக இருக்காது என்பது தான். எவ்வளவு அடக்குமுறைகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏவினாலும் சரி, நாங்கள் உங்களிடம் அடிபணிய மாட்டோம் என்று நெஞ்சை நிமிர்த்தி போராடுகிற நாடாக கியூபா உள்ளது என்றார் பாலகிருஷ்ணன்.

6 ) புரட்சிகர சிந்தனைகளால் இன்றும் இளைஞர்களை ஈர்க்கிறார் சேகுவேரா

காங்கிரஸ் தலைவர் கோபண்ணா பேசுகையில், சேகுவேராவின் மகளை பார்க்கும் போது நமக்கும் புரட்சிகர உணர்வு ஏற்படுகிறது. சமீபகாலமாக மங்கி வரும் புரட்சிகர கருத்துகளை மீண்டும் வளர்த்தெடுப்பதற்கு இந்த நிகழ்ச்சி உறுதுணையாக இருக்கும். தேசிய ஒருமைப்பாடு அமைப்பின் சார்பில் அமெரிக்க தூதரகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று உள்ளேன். இந்திய சோவியத் நட்புறவு அமைப்பான இஸ்கஸ், காங்கிரஸ் கட்சியின் பிரண்ட்ஸ் ஆப் சோவியத் யூனியன் ஆகியவற்றின் சார்பில் பல முறை ஏகாதிபத்திய எதிர்ப்பு கூட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

ஆனால் 1991 இல் சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள் குறைந்துவிட்டதால் சீரழிவை சந்தித்துக் கொண்டிருக்கி றோம். இந்த நேரத்தில் சேகுவேராவின் மகளை வரவேற்பது மிகமிக பொருத்தமானதாகும். ஏனென்றால் கொரோனா தொற்று காலத்தில் 136 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், 5 லட்சத்து 31 ஆயிரம் பேர் இறந்தார்கள். ஆனால் ஒரே ஒரு தடுப்பூசியை கூட அரசால் தயாரிக்க முடியவில்லை. ஆனால் கியூபா 5 வகையான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து உலகிற்கு இலவசமாக வழங்கி உயர்ந்து நிற்கிறது. அமெரிக்காவின் அச்சுறுத்தல் காரணமாகவும், பொருளாதாரத் தடை காரணமாகவும் கியூபா சந்தித்த சோதனைகள் ஏராளம். அந்த நாட்டின் மீது பொருளாதார ரீதியான அடக்குமுறையை ஏவி அதை முடக்கி விட வேண்டும் என்று பல நட வடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டாலும், அதை நெஞ்சுறுதி யுடன் எதிர்த்து போரிட்டவர்கள் பிடல் காஸ்ட்ரோவும், சேகுவேராவும். கியூப புரட்சியை இன்றைக்கு இளை ஞர்களிடம் சொல்ல வேண்டிய கடமை நம்முன் உள்ளது. இன்று இளைஞர்க ளால் ஈர்க்கப்படக் கூடிய புரட்சி யாளராக சேகுவேரா திகழ்கிறார். சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து 12 ஆண்டுகள்தான் செயல் பட்டனர். 39 வயதில் சுட்டுக் கொல்லப் பட்டார். அந்த 12 ஆண்டு செயல் பாட்டிலேயே லட்சக்கணக்கான இளை ஞர்களை அவர் ஈர்த்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவரு டைய புரட்சிகர சிந்தனைகள் தான் என்றார்.

7 ) வண்ணங்கள் மாறுபட்டாலும் எண்ணங்கள் புரட்சியை நோக்கியே
திராவிடர் கழக தலை வரும் விடுதலை ஆசிரியரு மான கி.வீரமணி பேசுகை யில், பொதுவுடமை தத்துவம் உலகம் முழுவதும் வெற்றி பெற வேண்டும் என பாடுபட்ட வர் சேகுவேரா. ஏகாதிபத்தி யம் எவ்வளவு எதிர்த்தாலும் கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ வும், சேகுவேராவும் வெற்றி வாகை சூடினார்கள். அந்த புரட்சியாளர்களின் வரிசையில் நின்று இன்று அவர்களுடைய மகள் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறார். அவருக்கு வரவேற்பளிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். கருப்பு, சிவப்பு என வண்ணங்கள் மாறுபடலாம். ஆனால் எண்ணங்கள் புரட்சியை நோக்கியே.

நீங்கள் கியூபாவின் மகள் மட்டு மல்ல, இந்தியாவின் மகள், தமிழ்நாட்டின் மகள். நீங்கள் எங்கே இருந்தாலும் எங்கள் சொந்தம், எங்கள் உறவு. இந்த உறவு நீடிக்க வேண்டும். பெரியாரும், சேகுவேராவும் தங்கள் உடல் நலத்தை பொருட்படுத்தாமல் இறுதிவரை அநீதிக்கு எதிராக பாடுபட்டார்கள். எங்கெல்லாம் அநீதி நடைபெறுகிறதோ அங்கெல்லாம் எனக்கு வேலை இருக்கிறது, அங்கு நான் செல்வேன் எனக் கூறி சென்றவர் தான் சேகுவேரா. அவரது வழியில் உலகம் முழுவதும் புதிய சமுதாயத்தை படைப்போம். பொதுவுடைமையை காப்போம் என்றார் கி.வீரமணி.

8 ) சேகுவேரா வந்ததைப் போன்ற சிலிர்ப்பு

விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசுகை யில், புரட்சி என்றாலே நினைவுக்கு வருவது சேகு வேராதான். எந்த தனிப்பட்ட கனவும் அவருக்கு இல்லை. வாழ்வு கடந்த ஒரு சிந்தனை யாளர், ஒரு அடையா ளம் அவர் என்றார். மொழி, இனம்,தேசம், மதம் , சாதி என்பதை கடந்து இளம் தலைமுறையினரால், ஜனநாயக சக்திகளால், புரட்சிகர சக்திகளால் நேசிக்கக் கூடிய மகத்தான ஆளுமை புரட்சியாளர் சேகுவேரா. அவருடைய மகள் இந்தியாவிற்கு, தமிழகத்திற்கு வந்திருக்கிறார் எனும்போது, சேகுவேராவே வந்ததைப் போன்ற உணர்வு, சிலிர்ப்பு, மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றார். உலகில் எங்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அது உனக்கு கோபத்தை ஏற்படுத்தினால் நீதான் என் தோழன் என்றார் சேகுவேரா. உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தக் கூடிய, சுரண்டக் கூடிய யாராக இருந்தாலும் அவர்கள் ஏகாதிபத்திய வாதிகள்தான். சேகுவேரா இருந்திருந்தால் இறையூரில் குடிநீரில் மனிதக் கழிவு கலந்த கொடுமையை வன்மையாக கண்டித்திருப்பார், சாதிய வன்கொடுமைகளை எதிர்த்து, சனாதன சக்திகளை எதிர்த்து போராடக் கூடியவர்க ளுக்கு துணையாக இருந்திருப்பார். சே மகள் என்பதற்காக அல்ல, அவருடைய கருத்துக்களை, கொள்கைகளை உள்வாங்கி ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார் என்பதற்காக அவரை போற்றுகிறோம். அமெரிக்கா, ஜப்பான் தான் ஏகாதிபத்திய நாடு என்று பொருள் இல்லை. ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் எங்கே இருந்தாலும் அது ஏகாதிபத்தியத்தின் வெளிப்பாடு தான்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே ஆட்சி என்பதும் ஏகாதிபத்தியம்தான். இதற்கு எதிராக போராடுவதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம்தான் என்றார் திருமாவளவன்.

9 ) கியூபாவின் சிறப்புகளை இளைஞர்களிடம் சேர்ப்போம்
மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வந்தியத்தேவன் பேசு கையில், துப்பாக்கியில் இருந்து பீரங்கி பிறந்தது என கூறுவார்கள். அப்படி ஒரு புரட்சிகரமான தலை வருக்கு பிறந்த அவர்கள், அவர் ஏற்றிப்பிடித்த அதே செங்கொடியை பிடித்துக் கொண்டு, அவர் பின்பற்றிய சோசலிசக் கொள்கையை அந்த நாட்டிலே வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பரப்பக் கூடிய பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

கொரோனா தொற்று உலகையே அழித்துக் கொண்டிருந்த நேரத்தில், கியூபா நாடு உலகிற்கு ஆற்றிய சேவையை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியது. சோசலிச நாடுகளுடைய சிறப்புகளை, கியூபாவின் தனிச் சிறப்புகளை நாம் இன்றைய இளைஞர்களிடையே கொண்டு செல்ல வேண்டும். இன்று இந்தியாவின் பல இடங்களில் காவிக் கொடி பறக்கிறது. தமிழ்நாட்டில் தாமரையை மலரச் செய்ய மோடி பல்வேறு மோடிமஸ்தான் வேலைகளை யெல்லாம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் மதவெறி சக்திகளுக்கு தமிழ் மண்ணில் இடமில்லை என்று சிவப்பும், கருப்பும், சிறுபான்மை மக்களாக இருக்கக் கூடிய இஸ்லாமியர்களும் ஓரணியில் திரண்டு போரா டிக் கொண்டிருக்கிறார்கள். இது இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என கேட்டுக் கொண்டார். புரட்சியாளர் சேகு வேராவின் மகளையும், பேத்தியையும் வரவேற்பதோடு, உங்களின் லட்சியங்களுக்கு மதிமுக என்றென்றும் துணை நிற்போம் என்று கூறினார். சேகுவேரா புதல்வியை வரவேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுப்பி யிருந்த வாழ்த்துச் செய்தியை வந்தியத்தேவன் இந்த நிகழ்ச்சியில் வாசித்துக் காட்டினார்.

(Maniam Shanmugam)