ஒரு கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது. கொரோனாவில் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 95,50,712 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் சங்கத்தினர் கைதாகி விடுதலை

டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்து க்கு ஆதரவாக சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற விவசாயிகள் சங்கத்தினர் 300இக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அராஜக எம்ஜிஆர் ஆட்சிக்கு ரஜினி, கமல், பாஜக எதற்கு …?

(சாவித்திரி கண்ணன்)

மாற்று அரசியலைப் பேசும் ரஜினியும் ’’எம்.ஜி.ஆர் ஆட்சி தருவேன்’’ என்கிறார்
ஊழலற்ற நேர்மையான ஆட்சியைப் பேசும் கமலஹாசனும் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடுகிறார்!
திராவிட கட்சிகளை ஒழிப்பதே இலக்கு என்ற பாஜகவும் எம்.ஜி.ஆரை கொண்டாடுகிறது..!
இதை, ’’சுயமாக ஒரு ஆட்சியை தருவதற்கு எங்களுக்கு துப்பில்லை’’ என்பதற்கான அவர்களின் ஒப்புதல் வாக்கு மூலமாகவே நாம் பார்க்கவேண்டும்!

அதிருப்தியாளர்களுடன் சோனியா காந்தி சந்திப்பு

காங்கிரஸ் அதிருப்தியாளர்களுடன் சோனியா காந்தி ,நாளை சனிக்கிழமை 19 ஆம் திகதி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தெரிவித்த மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், இவ் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தம்?

விவசாயிகள் போராட்டத்துக்கு நியாயமான தீர்வு காணும் வகையில் நீதிமன்றம் சார்பில் குழு அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதால், புதிதாக கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை யோசனை தெரிவித்தது.

கேரள உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் மகத்தான வெற்றி!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.2015 இல் 07 மாவட்ட பஞ்சாயத்துகளை வென்றிருந்த இடது ஜனநாயக முன்னணி இம்முறை நடந்த தேர்தலில் 11 மாவட்ட பஞ்சாயத்துகளை வென்றுள்ளது.

வடக்கு சந்தைகளுக்கு பூட்டு

வடமாகாணத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளையும் நாளை (18) முதல் மறு அறிவித்தல் வரை மூடுமாறு, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

மேலும் 312 பேருக்குக் கொரோனா….701 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 312 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெலியாகொட கொத்தணியைச் சேர்ந்த 300 பேருக்கும், சிறைச்சாலைகள் கொத்தணியைச் சேர்ந்த 12 பேருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை-நபீர்வத்த முடக்கம்

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நபீர்வத்த பிரதேசம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த தனிமைப்படுத்தல் அமுலில் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் கொரனா நிலவரம்

கல்முனை:

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை செய்லான் வீதி தொடக்கம் மாதவன் வீதி வரையாக உள்ள பகுதிகள், இன்று (17) முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.