கேரள உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் மகத்தான வெற்றி!

அதேபோல, 98 ஆக இருந்த ஒன்றிய பஞ்சாயத்துகள் இம்முறை 108 ஆக அதிகரித்துள்ளது. 941 கிராம பஞ்சாயத்துகளில் இடது ஜனநாயக முன்னணி 514 இல் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 06 மாநகராட்சிகளில் இடது ஜனநாயக முன்னணி 05 மாநகராட்சிகளைக் கைப்பற்றியுள்ளது.

இடது ஜனநாயக முன்னணியை எதிர்த்துக் களமிறங்கிய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும், பி.ஜே.பி. தலைமையிலான கூட்டணியும் படுதோல்வியைச் சந்தித்துள்ளன.இடது ஜனநாயக முன்னணிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. கூட்டணிகள் மிகவும் மோசமான பொய்ப்பிரசாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டு, தமது பண பலத்தைக் கொட்டிப் பிர்சாரம் செய்தபோதிலும் அக்கூட்டணிகளை நிராகரித்துள்ளனர்.கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இரண்டு விடயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளன.

ஒன்று, கேரள மக்கள் மதவாத மற்றும் பிற்போக்கு சக்திகளை ஆதரிக்கத் தயாரில்லை என்பது.இரண்டாவது, முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் கொள்கைகளையும், செயற்பாடுகளையும் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பது.இன்னொரு வகையில், உலகம் முழுவதும் மீள் எழுச்சி கண்டு வரும் சோசலிச சக்திகளின் அணிவகுப்பில் கேரள மக்களும் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியையும் இத்தேர்தல் முடிவுகள் எடுத்தியம்பி நிற்கின்றன.