உள்ளுர் அதிகாரசபை தேர்தல் முடிவுகள்

1. தமிழ் மக்களுக்கு – சகல தமிழ்த்தலைமைகளும் ஒன்றுபட வேண்டிய அவசியத்தையும்
2. சிங்கள மக்களுக்கு – அவர்களின் தலைமை மகிந்தவே என்பதையும்
3. சர்வதேசத்துக்கு – இனப்பிரச்சனை என்றும் தீரப்போவதில்லை என்ற சேதியினையும் கூறிநிற்கிறது.

இங்கு

1. ரணிலின் நரி தந்திரம் பலத்த அடிவாங்கியுள்ளது.
2. மைத்திரியால இனி ஒரு ஆணியையும் புடுங்க முடியாது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.
3. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு உடனடியாக பொதுத்தேர்தல் நடைபெறும் சாத்தியம் இருக்கிறது.

ஆக இத்தேர்தலால் உள்ளுர் அதிகாரசபைகளில் பெரும்பாலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கவேண்டியிருப்பதால் ஊழல் கட்டுப்படுத்தப்படும் என நம்பலாம்.

வீடு சைக்கிள் சூரியனோடு மாத்திரமல்ல வீணையோடும், படகோடும், ஒத்து ஓடும் அவசியமும் ஏற்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் பழையன மறக்கப்பட்டு ஒன்றுபட்ட புதிய அணியாக எழுச்சிபெற அனைவரும் முயலவேண்டும்.

(Koneswaran Mathyvannan)