‘குரங்கின் கை பூமாலை’யான கூட்டமைப்பு

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்றைக்கும் இல்லாதளவுக்கான பின்னடைவை, இந்தப் பொதுத் தேர்தலில் சந்தித்து நிற்கின்றது. 2015ஆம் ஆண்டு, பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளோடு ஒப்பிடும் போது, கூட்டமைப்பு சுமார் ஒரு இலட்சத்து 88 ஆயிரம் வாக்குகளை, இந்தத் தேர்தலில் இழந்திருக்கின்றது.