சீமான் உண்மை முகம்

நான் சீமானின் முன்னாள் ஆதரவாளன். அவரது உணர்சிகளை தூண்டும் பேச்சாலும் விடுதலைபுலிகளின் ஆதரவு நிலைப்பாட்டாலும் அவரால் கவரப்பட்டேன். பிறகு அவ‌ரை நெருக்கமாக கவனித்தபோது பல அதிர்ச்சியான உண்மைகள் தெரியவந்தன. எனது அனுபவத்தின் அடிப்படையில் அவரை பற்றி தெரிந்து கொண்ட விசயங்களை இங்கே தகுந்த ஆதாரங்களுடன் பகிர்ந்து கொண்டு உள்ளேன். இது தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஊடகங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் வந்த செய்திகளை ஆதாரமாக கொண்டு, வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். இதை மறுப்பவர்களிடம் நேர்மை இருந்தால் பதிலுக்கு வேறு ஆதரங்களை கொடுக்க வேண்டும்.

சீமான் புலிகளுக்கு செய்த துரோகங்கள்:
ஈழப்படுகொலைக்கு பின்னர் ஐநாவின் டப்லின் தீர்பாயத்தில் நடந்த விசாரணை மிக முக்கியமானது. அதில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 41 பக்க அறிக்கையை சமர்பித்துள்ளனர். அதில் LTTE யினர் போர்குற்றம் புரிந்தனர் என்று கூறியுள்ளார் சீமான். அந்த அறிக்கையில் 40 ஆவது பக்கத்தில், “விடுதலைப் புலிகள் ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் புலிகள் போரில் ஈடுபடுத்தினர், குழந்தைகளை LTTE யினர் பெற்றோரிடம் இருந்து பிடிங்கி, தங்களின் படைகளில் இணைத்துக் கொண்டனர். திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை LTTE யினர் செய்ததனர், மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் LTTE யினர் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தியதாகவும், தப்பிக்க பார்த்த தமிழர்களை சுட்டு
கொன்றனர்” என்று சிங்கள அரசாங்கம் பிரபாகரன் மீது கூறும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார் சீமான். நேரடியாக LTTE யினர் தான் போர் குற்றவாளிகள் என்று ஐ.நா விசாரணை குழுவில் வாக்குமூலம்அளித்துவிட்டு, இங்கு வந்து பிரபாகரனின் புகழ் பாடி கொண்டு இருக்கிறார் சீமான்.

சீமானின் இந்த துரோகத்தை கண்டித்துதான் சீமான் கலந்துகொண்ட”முள்ளிவாய்க்கால் முடிவல்ல” என்ற புத்தக வெளியீட்டு விழாாவில் கலந்து கொள்ளாமல் கவிஞர் காசிஆனந்தன், த.வெள்ளையன், இயக்குனர் வ.கெளதமன்
ஆகியோர் புறக்கணித்தனர். இவர்கள் தீவிரமான தமிழ் உணவாளர்கள் மற்றும் ஈழ ஆதரவாளர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

சீமானின் துரோகத்துக்கு இரண்டு ஆதாரங்கள்:
1. விகடன் என்பது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பத்திரிக்கை. ஈழ இறுதிபோர் உச்சத்தில் இருந்த போது விகடன் தான் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் உண்மை செய்திகளை தைரியமாக வெளியிட்டது அனைவரும் அறிந்தது.
இப்போது கூட சீமானின் பேட்டிகளை அதிகமாக வெளியிட கூடிய வெகுஜென பத்திரிக்கை விகடன் தான். அப்படிப்பட்ட பத்திரிக்கையிலேயே விடுதலை புலிகளுக்கு எதிராக ஐநாவில் சீமான் சமர்பித்த அறிக்கை பற்றி மிக கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது பொய் என்றால் சீமான் இதற்கு மறுப்பு தெரிவித்து இருப்பார். ஏனெனில் விகடன் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் விற்பனையாகும் வார இதழ். ஆனால் சீமான் இதை பற்றி வாயே திறக்காமல் கள்ள மௌனம் சாதிக்கிறார். இதுவே அவரின் மீதான குற்றச்சாட்டை உறுதிபடுத்துகிறது. விகடன் வெளியிட்ட செய்திக்கான லிங்கை கீழே கொடுத்து உள்ளேன்
http://www.vikatan.com/news/tamilnadu/64271-students-forum-turn-against-seeman.art

‘ஈழவிடுதலை என்பதெல்லாம் வெறும் வசனம்தானா?’ -சீமானுக்குத் தடை போடும் மாணவர் அமைப்பு
www.vikatan.com
2.தேவர் சமூகத்து மக்களால் நடதப்படும் பேஸ்புக் பக்கத்திலும் சீமான் ஐநாவில் சமர்பித்த அறிக்கைக்கு எதிராக சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேவர் ஜாதி மக்கள் என்ன வேற்று மொழிகாரர்களா? அவர்கள் சீமான் மேல் ஏன் அவதூறு பரப்ப வேண்டும்? அதற்கான இணைப்பு கீழே
https://m.facebook.com/thevarvamsamfilmsindia/posts/1614333865554009:0

சீமான் இப்படி பொய் சொல்ல காரணம் தாம் தான் விடுதலை புலிகளின் பிரதிநிதி என்று கூறி வெளிநாடுவாழ் தமிழர்களிடம் பணம் பறிக்க தான். சிங்கப்பூரில் விடுதலை புலிகளின் பெயரை பயன்படுத்தி முறைகேடாக பணம் வசூல் செய்த குற்றத்துக்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 5 பேர் சிங்கப்பூர் போலீசால் கைது ச‌ெ‌ய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அதற்கு ஆதாரமாக பத்திரிக்கைகளில் வந்த செய்தி
https://i0.wp.com/www.pathivu.com/app/uploads/2016/08/se.jpg
சீமானின் இலங்கை பயண பொய்கள்:
சீமான் இலங்கைக்கு சென்றது திரைப்படம் எடுப்பது தொடர்பான பயிற்சி கொடுக்க தான். இதை நடிகர் ராஜ்கிரன் ஒரு பேட்டியில் பேச்சுவாக்கில் கூறிவிட்டார். சீமான் தலைவர் பிரபாகரனை சந்தித்தது 5 நிமிடங்களுக்குள் தான். பாரதிராஜா, மகேந்திரன் போன்றோர் எற்கனவே இதேபோல் சென்று தலைவருடன் புகைப்படம் எடுத்துள்ளனர். அதேமாதிரி தான் ஒரு இயக்குனர் என்ற அடிப்படையில் சீமானோடு ஒரே ஒரு புகைப்படம் எடுத்துள்ளார் தலைவர்.அதன் பிறகு பிரபாகரன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் சீமான் என்ற பெயரை உச்சரிக்கவே இல்லை. ஆனால் சீமானோ அவரோடு எடுத்த ஒரே ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு, என்னமோ இவர் தான் பிரபாகரனின் வலது கையாக
செயல்பட்டது போலவும், பிரபாகரன் என்னிடம் “அதை கூறினார், இதை கூறினார்” என்று பொய் சொல்லி கொண்டு இருக்கிறார். அதுகூட‌ பரவாயில்லை, “பிரபாகரன் எனக்கு இலையில் கடல் நண்டு பரிமாறினார்” என்று எல்லாம் பேட்டி கொடுத்துள்ளார். அப்படி உண்மையிலேயே பிரபாகரனுக்கு நெருக்கமானவராக இருந்திருந்தால், “இவர் இப்போது சொல்லும் விசயங்களில் ஒன்றை கூட ஏன் தலைவர் உயிரோடு இருக்கும் போது மேடைகளில் கூறவில்லை?” ஏனெனில் உண்மையை பிரபாகரன் வெளியிட்டு விடுவார் என்ற பயம் தான் காரணம்.

ராஜ்கிரனுக்கு சீமானுடன் எந்தவித கசப்பும் கிடையாது. அவர் திரைதுரையில் ஒழுக்கமானவர் என்று பெயர் எடுத்தவர். தமிழ் சினிமாவில் உள்ள ஒருவர் கூட ராஜ்கிரனை பற்றி சிறிய குறைகூட சொல்ல மாட்டர்கள். ராஜ்கிரன் எந்த கட்சியிலும் உறுப்பினரும் கிடையாது. நந்தா படத்தில் பிரச்சனை வரும் என்று சிவாஜிகணேசன் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் இலங்கை தமிழர்கள் மீது உள்ள பாசத்தால் தைரியமாக நடித்தவர் ராஜ்கிரண். எனவே அவர் பொய்யோ, அவதூறோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் சீமானின் இலங்கை பயணம் பற்றி கொடுத்த பேட்டி கீழே உள்ளது

True story about Seeman
www.youtube.com
Actor Raj kiran describes, who is Seeman?

இதுமட்டும் அல்லாது புலிகளின் தளபதி மரியாதைகுறிய அண்ணன் சூசை அவர்கள் சீமானை பற்றி பேசுவது போல போலியான ஆடியோவை யுடிப்பில் வெளியிட்டு உள்ளார் சீமான் . அப்படி அவர் உண்மையாக சீமானை பற்றி பேசி இருந்தால், அதை புலிகள் அவர்களின் அதிகாரபுர்வ வானொலியிலேயே வெளியிடுவார்கள்.இதுதான் விடுதலை புலிகளின் மரபு. அனைவரும் இறந்தபின், தான் சொல்லும் பொய்யை மறுக்க யாரும் உயிரோடு இல்லை என்ற தைரியத்தில் இப்படி ஒரு கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவது நியாயமா சீமானே? அரசியல் விமர்சகர்கள் உங்களை “பிணம்திண்ணி” என்று அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது சீமான்
சீமானும் சிங்களர்களும்:
சீமானுக்கு சிங்களர்களோடு பல காலமாகவே நெருங்கிய தொடர்பு
உள்ளது. அதன் காரணமாக தான் தனது தம்பி படத்தில் ஒரு சிங்கள பெண்ணை(பூஜா) ஹீரோயினாக நடிக்க செய்தார் சீமான். ராஜபக்சேவின்
சொந்தங்கள் தயாரித்த கத்தி படத்தை தமிழகத்தில் திரையிட தமிழ் உணர்வாளர்கள் எதிர்த்த போது “கத்தி படத்தை எதிர்க்க முடியாது” என்று வெளிப்படையாக கூறியவர் சீமான். கடைசியாக ஐ.நாவின் டப்லின் தீர்ப்பாயத்தில் “விடுதலைபுலிகள் தான் தமிழர்களை கொன்றனர்” என்று ஒப்புதல் வாக்குமூலம்கொடுத்துள்ளார் சீமான். ஈழ போர் தோல்வியில் முடிந்ததும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அமைக்க முயன்றார்கள் வெளிநாடு வாழ் தமிழர்கள். ஒரு காலத்தில் நாடு இல்லாத யூதர்கள் இது போன்ற அரசை அமைத்து பிறகு இஸ்ரேல் என்ற நாட்டை பெற்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிங்கள அரசு தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்க முடிவு செய்தது. சீமானுக்கு எங்கிருந்தோ பணம் வந்து குவிந்தது.அதனால் தான் பல வருடம் அரசியலில் இருந்த பாமாகவுக்கு இணையாக புதிதாக கட்சி தொடங்கிய சீமானும் சென்ற தேர்தலில் டிவிகளில் “போட்டு பார் ஓட்டை, அப்புறம் பார் நாட்டை” என்று பிரமாண்டமாக விளம்பரம் செய்தார்.உலகம் முழுக்க தமிழர்கள் வாழ்ந்த இடத்தில் இருந்த தமிழ் அமைப்புகளில் பிளவுகள் ஏற்பட்டது. நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்புகள் அங்கு தொடங்கப்பட்டன. அதன் பிறகு இன்று வரை உண்மையான நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமையவில்லை

சீமானும் தமிழ்நாடும்:
சரி இப்போது தமிழ்நாட்டு அரசியலுக்கு வருவோம். சீமான் தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாக கொந்தளிக்கிறார். ஆனால் அதை செய்யக்கூடிய மணற்கொள்ளையன் வைகுண்டராஜனும், கிராணைட் கொள்ளையன் பி.ஆர்.பியும் சீமானுக்கு நெருக்கமானவர்கள் என்று அவரின் தம்பிகள் எத்தனை பேருக்கு தெரியும்? சீமானுக்கு திருமணம் முடிந்த உடன் வைகுண்டராஜன் தான் தடபுடலாக கறி விருந்து கொடுத்தார். பதிலுக்கு வைகுண்டராஜன் மகன் திருமணத்தை சீமான் தான் முன்னின்று நடத்தி வைத்தார். நோட்டாவை விட குறைவான வாக்குகள் வாங்கிய “நாம் தமிழர்” கட்சிக்கு வைகுண்டராஜனின் நியூஸ் 7 தொலைக்காட்சியில் அளவுக்கு அதிகமாக முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது.சீமானட வைகுண்டராஜனின் பினாமி என்று கூறப்படும் குற்றச்சாட்டை இது உறுதிபடுத்துவது போல் உள்ளது.பி.ஆர்.பியில் தொழிலாளர் பிரச்சனை வந்த போது பி.ஆர்.பிக்கு ஆதரவாக “பி.ஆர்.பியிடம் வாங்கித் தின்றுவிட்டு அவரையே குற்றவாளியாக்குவது நியாயமா?” என்று பேசியதும் சீமான் தான். இவர்தான் ஆட்சிக்கு வந்து இயற்கை வளங்களை காக்க வைகுண்டராஜனையும், பி.ஆர்,பியையும் கைது செய்ய போவதாக கூறுகிறார். அடுத்து கல்வியை அரசுடைமை ஆக்கப்போவதாக சீமான் கூறுகிறார். ஆனால் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய கல்வி கொள்ளையனான சிறை சென்ற பாரிவேந்தர் பச்சமுத்து தான் 2016 தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சிக்கு 50 லட்சம் ருபாய் நன்கொடை கொடுத்துள்ளார். பச்சமுத்துவிடம் பணம் வாங்கி கொண்டே அவருக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுப்பார்? இன்று அதிமுகவுக்கு எதிராக பொங்கும் சீமான் “சசிகலாவின் கணவர் நடராஜனின் காலில் விழுந்தவர்” என்பது தான் உண்மை