தமிழ்நாடு தேர்தல் முடிவு

இதுவரை வெளிவந்து தேர்தல் வாக்கு எண்ணிக்கைகளின் அடிப்படையில் அதிமுக தனிப் பெரும் கட்சியாக பெரும்பான்மை பெறும் நிலைகள் எற்படும் போல் தோன்றுகின்றது. இது நான் எதிர்பார்த்த யாரும் அறுதிப் பெரும்பான்மை பெற மாட்டார்கள் என்ற கணிப்பை மாற்றியுள்ளதாக அமைகின்றது. விஜயகாந்த் தலமையிலான முற்போக்கு கூட்டணி நான் எதிர்பார்ததைப் போல் மூன்றாவது பெரும் கட்சியாக முன்னிலை வகிக்கவில்லை என்பது எனது தேர்தல் முடிவுகள் பிழைப்பதற்கு முக்கிய காரணியாக அமையப் போகின்றது என்பதை இதுவரை வந்த தேர்தல் முடிவுகள் கோடிட்டு காட்டுகின்றன. அதிமுக ஆட்சியமைப்பது ஜேயலலிதாவின் எதேச்சாகாரத்திற்கே வழிவகிக்கும் என்பதே மீண்டும் என்கருத்தாக அமைகின்றது. இது தமிழநாட்டு மக்களுக்கு நல்லது அல்ல