நினைவேந்தலில் ஈடுபட்டஎண்மர் கைது

நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை புனரமைக்கும் செயற்றிட்டத்தில் இவர்கள் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரைக்கமைவாக, கல்குடா பொலிஸாருடன், ஏறாவூர்ப் பொலிஸ் குழுவினரும் இணைந்து மேற்படி எண்மரையும் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கைதுசெய்யப்பட்ட இவர்கள், எதிர்வரும் 3 நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.