புலிகளின் திலீபனைப்பற்றி அறிந்து கொள்ளுங்கள்

84ம் ஆண்டு எனது ஊரில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றுக்காக புலி உறுப்பினரன முரளி வந்திருந்தார். அப்போது புலிகள் தலைமறைவாக இருந்த காலம். ஊருக்குள் ஆட்சேர்க்கும் நடவைக்கையில் முரளி ஈடுபட்டிருந்தார். கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் முரளியைத் தாறுமாறாகக் கேள்விகள் கேட்டனர் அங்கு ஒருவர் கேட்ட .கேள்விக்கு முரளியால் பதில் சொல்ல முடியவில்லை.. கேள்வி கேட்டவர் வேறு யாருமல்ல. ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தைச் சேர்ந்த நக்கீரன்.

மறுநாள் திலீபனையும் அழைத்துக்கொண்டு கூட்டம் நடந்த இடத்திற்கு முரளி வந்திருந்தார். அவ்விடத்திற்கு வந்த திலீபன் மிகக் கோபத்துடன் யார் அந்தக் கேள்வி கேட்டவன் அவனுடன் நான் பேசவேண்டும் என்றார். அவ்விடத்தில் நின்றுகொண்டிருந்த என்னை அவ்வூரைச் சேர்ந்த இன்னொரு புலி ஆதரவாளர் நக்கீரனை அழைத்துவரும்படி கூறினார். காரணம் நக்கீரன் எனது மைத்துனர். நான் மறுத்துவிட்டேன். அங்கு நின்றுகொண்டிருந்த நக்கீரனின் நண்பர் ஒருவரிடம் நான் நக்கீரனுடன் திலீபன் பேசவேண்டுமாம். அவரை அழைத்துவர முடியுமா? என்று கேட்டேன். அவர் போய் நக்கீரனிடம் சொன்ன போது நக்கீரன் வர மறுத்துவிட்டார். கேள்வி கேட்டது நேற்று. இன்றைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்றும் சொல்லிவிட்டார்.

இதைத் திலீபனிடம் கூறியபோது திலீபன் கடும் ஆத்திரத்தில் அவன் எப்படி இந்தக் கேள்வியைக் கேட்பான். அவனைச் சந்தித்தே ஆகவேண்டும் என்று குமுறினார். மீண்டும் அங்கு வந்த சிலர் திலீபனிடம் கேள்விகள் கேட்டனர்.

ரெலி இயக்கத் தலைவர் ஜெகனை எதற்காகக் கொன்றீர்கள் என்று கேட்டபோது திலீபன் “ அண்ணை இனம் கண்டுகொள்ள முடியாத நிலயில் தவறுதலாகக் கொல்லப்பட்டார் என்று ஒரு நோட்டீஸ் விட்டனாங்கள் வாசிச்சனீங்களோ என்று பதில்க் கேள்வி கேட்டார். கேட்டவர் வாயடைத்து விட்டார்.

பின்னாளில் நடந்த இன்னொரு கூட்டத்தில் கேள்வி கேட்ட ஒருவர் பிடித்துச் செல்லப்பட்டு நையப் புடைக்கப்பட்டார். திலீபன் வீட்டு மலகூடத்தில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்தியப்படை யினரால் முரளி கொல்லப்பட்டார்.

சங்கானைப்பகுதிக்கு அடிக்கடி ஓய்வு எடுப்பதற்காக அங்கு ஒரு அம்மா வீட்டிற்கு வருவார். அந்த அம்மாவுக்கு வீட்டுக்கிணறு கூட கட்டிக் கொடுத்துள்ளார். அந்த அம்மாவும் இவரின் தேவைகளை மிகவும் புரிந்தவர்.அவர திலீபனின் அம்மாவின் வயது.இங்கிருந்தே சங்கானை மாவடி ரெலோ முகாமில் தங்கியிருந்த திருமலை மாவட்டத்தை சேர்ந்த 32 அப்பாவிச் சிறுவரகளைப் போய் சுட்டுக் கொன்றான்.இவன் தனியாகவே சுட்டான்.சக உறுப்பினர்கள் தடுத்தும் கேட்கவில்லை .இத்தனைக்கும் கண்நோயால் அவஸ்தைப் பட்ட சிறுவர்கள்.(Vijaya Baskaran)

ரெலோ சிறீ கட்டைப்பிராயிலிருந்து இராஜவீதியை கடந்து (முடமாவடிக்கும் இராமசாமி பரியாரியார் வீட்டிற்கும் இடையே) கடந்து பலாலி வீதியை கடந்து யாழ்பல்கலைக் கழகத்தின் பின் வீதி(தபால்பெட்டி ஒழுங்கை ) (இதனை கம்பஸ் வீதி என்றே அழைப்பர்). பின்பு ஈரோசின் வைகுந்தம் அல்லது அவர்களின் யாழ் இராணுவத்தளபதி சண் வீடடில் தம்மை காப்பாற்றுமாறு கேட்டபோது. இவர்களைப் பின்தொடர்ந்து வெறிநாய்போல் துரத்தி வந்த குழுவிற்கு தலமைதாங்கியது திலீபனே அப்போது அவர் யாழ்பாணத்தின் அரசியல் பொறுப்பாளராக இருந்தாலும் இந்த உண்யாவிரதி ஆயுததாரியாக சிறீயைக் கொலை செய்ய வெறியுடன் அலைந்ததை கண்ணால் கண்டவன் நான் இதுபற்றி விளாவாரியாக பல கூட்டங்களில் பேசியும் உள்ளேன் இன்னும் விபரங்களும் உண்டு. ஒரு குசுறுச் செய்தி திலீபன் எனது உயர்தரவகுப்பு பௌதிக மாணவனும் கூட.(Siva Easwaramoorthy)