மதிப்புக்குரிய கடற்தொழில் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு!

நாடு பூராவும் தாங்கள் செயலாற்றிவரும் கடற்தொழில் அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கையின் வரலாற்றில் எக்காலமும் இல்லாத மிகப் பாரிய திட்டங்களாகும். இலங்கைத் தீவின் கடல்சார் பொருளாதார வருவாய் தரவல்ல வளங்கள் மிகப்பாரியளவு இருந்தபோதும் கடந்தகாலங்களில் இவற்றை நாம் சரியாக அறுவடை செய்யவில்லை. இப்போ தாங்கள் அதிகாரத்துக்கு வந்தபின் புதிய பண்ணைமுறைத் திட்டங்களை அறிமுகப் படுத்தியும், உருவாக்கியும் வருகிறீர்கள்.