மாதவிடாய் வரியும் ’ சம்மட்டியை ’ கையிலேந்தி நிற்கும் சிலையும்

பிரதான நகரங்கள், சில சந்திகளில் கம்பீரமாய் காட்சியளிக்கும் சிலைகளில் காகங்கள் எச்சமிட்டிருப்பதை பார்த்து பலரும் சிரித்திருப்பர். ஆனால், சிலைகளின் பின்னிருக்கும் வருத்தங்கள் தெரியாமலே போய்விடும். சிலைகளுக்குப் பின்னாலும் ஏதோவொரு வகையில் ‘இரத்தம் தோய்ந்த’ கதைகள் உண்டு.