லெப்பா ஸ்வெடோஸரா ராடிக் .

(Rathan Chandrasekar)

1925 டிசம்பர் 19இல் யுகோஸ்லாவியாவின் கஸ்னிகா கிராமத்தில் பிறந்த சுட்டிப்பெண். படிப்பிலும் கெட்டி .
ஆரம்பப்பள்ளிக் கல்வி முடித்த கையோடு கைவினைக் கலைகளுக்கான பள்ளியில் சேர்ந்து படித்தாள் லெப்பா. இலக்கியங்களின்மேல் மாளாக் காதல் இந்தச் சிறுமிக்கு.