ஹெரோய்னுடன் இந்திய மீனவர்கள் மூவர் கைது

மன்னார் அரிப்பு பிரதேசத்துக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இரண்டு கிலோகிராம் ஹெரோய்ன் போதைபொருளுடன் இந்திய மீனவர்கள் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த போதைபொருளுடன் வந்த இந்திய மீனவர்கள் பயணித்த சிறிய ரக மீனவப் படகில், நேற்று வியாழக்கிழமை அதிகாலை, கடற்படையினர் சோதனை நடத்தினர். இந்த திடீர் சோதனையின்போது, இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட ஹெரோய்ன் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன். படகில் இருந்த இந்திய மீனவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்க்ள மற்றும் கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் போதைபொருளை கொழும்பு, போதை ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.