ஜம்மு மற்றும் காஷ்மீரில் மீண்டும் மலரும் ஜனநாயகம்: நிரந்தர அமைதிக்கு வித்திடட்டும்

ஜம்மு மற்றும் காஷ்மீரில், நடைமுறையில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவும், ஒன்றியப் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தலை விரைவில் நடத்தவும், அந்தப் பிராந்தியத்தில் உள்ள முன்னணி அரசியல் தலைவர்களுடனும் கருத்தொற்றுமையை ஏற்படுத்தவும் ஒன்றிய அரசு கொண்டிருக்கும் அக்கறையை காஷ்மீர் தலைவர்களுடனான பிரதமரின் சந்திப்பு வெளிப்படுத்தியுள்ளது.

மெகெல்லேயில் திக்ரேயின் முன்னாள் ஆட்சியாளர்கள்

எதியோப்பியாவின் திக்ரே பிராந்தியத் தலைநகரான மெகெல்லேயை மீண்டும் கட்டுப்படுத்துவதாக அப்பிராந்தியத்தின் முன்னாள் ஆட்சியாளர்கள் நேற்று தெரிவித்துள்ளனர். ஏறத்தாழ எட்டு மாத மோதல்களின் பின்னரே குறித்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தமொன்றை குறித்த ஆட்சியாளர்களை வெளியேற்றிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்க ஆரம்பித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியாக மொடேர்னா அல்லது ஃபைசர் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சின் ஆலோசனைக்குழு அனுமதியளித்துள்ளது.

முன்னாள் யாழ் மாநகர மேயர் துரையப்பா

(George RC)

நான் பட்டணத்துப் பாடசாலையில் படித்த காலத்தில், பாடசாலை முடிந்து கிராமத்திற்கான நெடுந்தூரப் பயணத்திற்காக, யாழ்.பிரதான வீதியில் உள்ள திருக்குடும்ப கன்னியர் மடத்திற்கு அருகில் உள்ள பஸ் தரிப்பில் காத்திருப்பேன்.

அரசியலமைப்பு அதிகாரங்களை முறையாக நடைமுறைப் படுத்துவதன் மூலமே சுபிட்சத்தை எட்டமுடியும் – கலாநிதி எம் பி ரவிச்சந்திரா

மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் உரையாறறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 72 ஆவது சுதந்திர தின வைபவத்தில் ஆசிரியர்களை வழிப்படுத்தும் கல்வியாளர்கள் மத்தியிலும் இலங்கை சமூகத்தைக் கட்டியெழுப்பும் ஆசிரியர் சமூகத்தின் மத்தியிலும் அதற்கு உறுதுணையாக இருக்கும் இணைந்த சேவைகளை சேர்ந்தவர்கள் மத்தியிலும் இச்சிறப்பு நிகழ்த்துவதில் உவகை அடைகிறேன்.

நவ தாராளவாத அரசியல் பொருளாதார தோல்வி: அடுத்த நகர்வு என்ன?

(வி.சிவலிங்கம்)

உலகம் முழுவதையும் கோவிட்-19 நோய் உலுக்கி வரும் நிலையில் உலக திறந்த சந்தைப் பொருளாதாரமும் இறுகிப் போயுள்ளது. உலகிலுள்ள அரசுகள் பல தமது பொருளாதாரத்தை எவ்வாறு இயக்குவது? என்பதில் பெரும் பிரச்சனைகளை எதிர் நோக்கியுள்ளன. முதலாளித்துவ நாடுகள் பல தமது சேமிப்பின் பெரும்பகுதியை தத்தமது பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல் தடுக்கும் தேவைகளுக்குப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. ஆனால் சேமிப்பு அற்று ஏற்றுமதி வருமானத்தில் தங்கியிருந்த இலங்கை போன்ற நாடுகள் கடன்களுக்குள் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் மீது பரிவுகாட்டும் தமிழக அரசு

(அருளம்பலம்-விஜயன்)

தமிழகத்தில் இலங்கை தமிழ் மக்கள் முகாம்களிலும் ,முகாமிற்கு வெளியே என ஒரு லட்சம் வரையிலானோர் வாழ்ந்து வருகிறார்கள். இது தவிர விசேட முகாம் ஒன்று திருச்சி கொட்டப்பட்டு சிறைச்சாலையில் இயங்கி வருகிறது. இதில் சட்டத்தக்கு புறம்பான செயல்பாடுளில் ஈடுபட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை விடுதலை செய்து சாரதாரண முகாம்களில் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றை சுகாதார அமைச்சு இன்று (28) முதல் ஆரம்பித்துள்ளது. இதன்படி, வீடுகளில் தங்க வைக்கப்படும் தொற்றாளர்களுடன் தினமும் தொலைபேசி ஊடாக வைத்தியர்கள் தொடர்புக்கொண்டு, தொற்றாளர்களின் நிலைமையைக் கண்காணிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் தொற்றுக்குள்ளானோரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கனடாவில் மேலும் தேவாலயங்கள் எரிப்பு

மேற்கு கனடாவிலுள்ள பழங்குடியினச் சமூகங்களில் மேலுமிரண்டு கத்தோலிக்கத் தேவாலயங்கள் நேற்றுக் காலையில் எரிக்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டு தேவாலயங்களிலும் ஒரு மணித்தியாலத்துக்குள்ளேயே தீ ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டு கட்டடங்களும் முழுமையாக அழிவடைந்துள்ளதாகவும், தீகளை சந்தேகத்துக்கிடமானதாகக் கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு: மேய்ச்சல் தரை அத்துமீறல்

(இல. அதிரன்)

அரசியல் என்பது, நடுநிலைமையும் பொதுப்படையும் கொண்டதாக அமையப்பெற்றிருக்க வேண்டும். அது ஒருதலைப்பட்சமாக, பக்கச்சார்பாக முடிவுகள் எடுக்கப்படுகின்றபோது, திட்டங்கள் கொண்டு வரப்படும் பொழுது, முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றன. இதற்கு நல்லதோர் உதாரணமே கிழக்கின் மேய்ச்சல்தரை அத்துமீறல்கள்.