அரசியலமைப்பு அதிகாரங்களை முறையாக நடைமுறைப் படுத்துவதன் மூலமே சுபிட்சத்தை எட்டமுடியும் – கலாநிதி எம் பி ரவிச்சந்திரா

தேசிய பாதுகாப்பு சுபீட்சம் நிறைந்த நாடு என்ற தொனிப்பொருளில் நிகழும் இந்த சுதந்திர தின வைபவத்தில் நாம் சிந்திப்பதற்கும் அமுல்படுத்துவதற்கு அவ்வண்ணமே செயற்படுவதற்கான நிர்வாக முகாமை முகாமைத்துவ நெறிமுறைகளை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் அமைப்பின் பிரகாரம் பின்பற்றுவதற்கும் முன்னோக்கி செல்வதற்கும் இலங்கை மக்கள் என்ற அளவில் கடமைப்பட்டுள்ளோம்.

இலங்கைத்தீவின் சுதந்திரத்தின் பின்னரான அரசியல் நிலைமைகளும் அதன் போக்குகளும் இந்நாட்டின் கல்வி பொருளாதாரம் தொழிற்துறை அபிவிருத்தி போக்குகளின் நடைமுறையிலும் செயல் வடிவத்திலும் அமுலாக்கத்திலும் எத்தகைய எதிர்வினைகளை உண்டு பண்ணியுள்ளது என்பதை இலங்கைத் தீவின் குடிமக்கள் என்ற வகையில் நாம் கடந்த காலங்களில் அறியாததும் அனுபவிக்காததும் ஏதுமில்லை.
இந்தப் பின்புலத்தில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 72 ஆண்டுகால சுதந்திர தினத்தை அனுபவிக்கும் தருவாயில் நாம் இலங்கையர் என்ற வகையில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக சுதந்திரம் என பெற்றுக்கொண்டு அனுபவித்தவை எவை என்பதை ஒருகணம் பட்டியல்படுத்தினால் நாம் அனுபவித்த வலிகளும் வேதனைகளும் துயரங்களும் ஓலங்களும் தான்.

1972 ஆம் ஆண்டு இத் தீவு குடியரசு அந்தஸ்தைப் பெற்ற போது முதலாவது குடியரசு யாப்பு தயாரிக்கப்பட்டது. அந்த யாப்பில் இலங்கை சுதந்திரமும் தன்ன திக்கமும் இறமையும் கொண்ட குடியரசு என முக வாசகம் குறிப்பிடுகிறது. அதன் அரச கொள்கைகளும் தத்துவங்களும் அரச பிரசைகளின் பொருட்டு அனுசரிக்க வேண்டிய நலன்புரி பணிகள் அபிவிருத்தி சமாதானம் அமைதி மற்றும் சகவாழ்வு உட்பட சகல விடயங்கள் தொடர்பாகவும் மேம்பாட்டை ஏற்படுத்துவது அரசின் கடப்பாடாகும். எனினும் செய்யப்படவில்லை என்று சட்டத்தின் முன்னே பிரசைகள் அதனை கேள்விக்குட்படுத்த முடியாது என 1972 அரசியல் அமைப்பின் 16ஆவது 18வது உறுப்புரைகள் வலியுறுத்துகின்றன.

மேலும் முதன்முறையாக இலங்கையின் அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் 18 ஆவது உறுப்புரை குறிப்பிடுகிறது. இதன் மூலம் இன மத பால் சாதி வேறுபாடுகளின்றி சகல உரிமைகளையும் சமத்துவமாக பிரசைகள் உரித்துடையவர்கள் என குறிப்பிடப்பட்டாலும் மேற்படி உரிமைகள் நிவாரணம் கோரி செல்லக்கூடிய ஓரிடம் குறிப்பிடப்படவில்லை.
மேலும் அரசகரும மொழியைப் பொறுத்தவரையில் அது 1956 ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க அரசகரும மொழி சட்டத்தின் மூலம் சிங்கள மொழி மாத்திரமே இலங்கையின் அரச கரும மொழி என குறிப்பிடப்பட்டு இருந்தபோதும் சிறுபான்மை சமூகத்தின் தொடர் போராட்டங்கள் காரணமாக அன்றைய ஆட்சியாளர்கள் 1958 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க சட்டத்தின் படி தமிழ்மொழி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் அமுலாக்கப்பட்டது. ஆயினும் 1972ஆமம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பு 1956ஆம் ஆண்டு 33ம் இலக்க சிங்கள மொழியை அரச கரும மொழி என்பதை மேலும் உறுதிப்படுத்தியது.

இந்தவகையில் இலங்கை தீவில் வாழும் பன்முக சமூகத்திற்கு இந்த அரசியல் யாப்பானது பொருத்தப்பாடற்றது என்பதுடன் 1971இல் இடம்பெற்ற சிங்கள இளைஞர்களது புரட்சியும் இலங்கைத் தீவிற்கு இவ் யாப்பு பொருத்தமற்றது என்பதை உறுதிப்படுத்தியது . இன் நிலைமைகளில் இலங்கை சிறுபான்மையினரின் உரிமை போராட்டங்கள் ஜிஜி பொன்னம்பலத்தின் 50ற்கு 48 கோரிக்கையும் அதைத் தொடர்ந்த சிறிய ஒழிப்புமொழி போராட்டமும் அகிம்சைப் போராட்டங்களும் சமவுடமை ரீதியான கருத்தாடல்கள் இத்தீவின் சிறுபான்மையினருக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறைகளும் அதனை தொடர்ந்து சமஸ்டி கோரிக்கைகளும் வலுப்பெற்றன. இத்தகையதொரு சூழ்நிலையில் இலங்கைத் தீவிற்கு பொருத்தமான ஒரு அரசியல் யாப்பின் அவசியம் உணரப்பட்டது. இதன் விளைவாக அன்றைய ஆட்சியாளர்களால் 1978 ஆம் ஆண்டு இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது.

இந்த யாப்பின் மூலம் ஜனநாயகத்தின் ஊடாக சோஷலிஸம் கூறும் இலக்குகளை அடையலாம் என்ற நம்பிக்கையால் ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவர் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டார். அரச நிர்வாகத்தில் மீயுயர் கருவியாக பாராளுன்றம் அமைக்கப்பட்டது. எளிய பெரும்பான்மை தேர்தல் முறை ஒழிக்கப்பட்டு விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அரசியல் நீதிமன்றத்திற்கு மாற்றிடாக உயர் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டது. ஜனநாயக சுதந்திரம் திறந்த பொருளாதாரம் மற்றும் தாராண்மைவாத கருத்துக்களை மேம்படுத்தும் அரசின் கொள்கை தத்துவம் கிடைக்கப்பெற்றது. மேலும் பொது சேவை, நீதி சேவைகள் ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.

மக்களின் கருத்துக்களை அறியும் வண்ணம் கருத்துக்கணிப்பு பெறும் ஒப்பம் கோடல் என்ற நேரடி ஜனநாயக ஏற்பாடு முதல் தடவையாக
யாப்பில் சேர்க்கப்பட்டது. அடிப்படை உரிமைகள் அத்தியாயம் மேலும் விரிவுபடுத்த பட்டதுடன் அவை மீறப்படும்போது பாதிக்கப்பட்டவர் நிவாரணம் பெறுவதற்கான ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டன. இவ் அரசியலமைப்பின் விசேட அம்சங்களாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அடிப்படை உரிமைகள் மாகாணசபை முறைமை நீதித்துறை விகிதாசாரத் தேர்தல் முறைமை சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டன மேலும் அரசியலமைப்புக்கான பதினாறாம் திருத்தம் அரச கரும மொழி அமுலாக்கம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

குடிமக்கள் அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளுதல் மற்றும் அலுவல்கள் நடத்துதல் பற்றிய அரச அலுவலர்களின் பொறுப்புக்கள் கூறப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் என்ற வகையில் அரசியலமைப்பு சட்ட ஏற்பாடுகளை தெரிந்திருத்தல் அவசியமாகும். இவ்வகையில் 1978 ஆகஸ்ட் 31 ஆம் திகதி அன்றைய அரசு அறிமுகப்படுத்திய அரசியலமைப்பில் பின்வரும் அத்தியாயங்களில் சட்டம் செயற்படுவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வகையில் 1ஆம் அத்தியாயத்தில் இலங்கை மக்கள் அரசு மற்றும் இறைமை பற்றி குறிப்பிடப்படுகின்றது. 2ஆம் அத்தியாயம் மதம் பற்றி குறிப்பிடுகின்றது. மூன்றாம் அத்தியாயம் அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுகிறது. நாலாம் அத்தியாயம் அரச கரும மொழி ஐந்தாம் அத்தியாயம் பிரஜாவுரிமை ஆறாம் அத்தியாயம் அரசு கொள்கையின் அடிப்படை கோட்பாடுகளும் அடிப்படை கடமைகள் ஏழாம் அத்தியாயம் ஆட்சித்துறை குடியரசின் ஜனாதிபதி எட்டாம் அத்தியாயம் ஆட்சிமுறையை அமைச்சரவை ஒன்பதாம் அத்தியாயம் ஆட்சித்துறை பகிரங்க சேவை பத்தாம் அத்தியாயம் சட்டமன்றம் பாராளுமன்றம் பதினொன்றாம் அத்தியாயம் சட்டமன்ற நடவடிக்கை முறைமை தத்துவங்களும் பன்னிரண்டாம் அத்தியாயம் சட்டமன்றம் அரசியலமைப்பு திருத்தம் பற்றியும் பதிமூன்றாம் அத்தியாயம் மக்கள் தீர்ப்பு பொதுமக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு முறை பற்றியும் பதினைந்தாம்அத்தியாயம் வாக்குரிமையும் தேர்தல்களும் பதினாறாம் அத்தியாயம் நீதித்துறை சுதந்திரம் நீதிச்சேவை ஆணைக்குழு பதினாறாம் அத்தியாயம் மேல்நிலை நீதிமன்றங்கள் உயர்நீதிமன்றங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றம் பத்தொன்பதாம் அத்தியாயம் அரச நீதி பதினெட்டாம் அத்தியாயம் பொதுமக்கள் பாதுகாப்பு போலீசார் பத்தொன்பதாம் அத்தியாயம் நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அதிகாரங்களும் கடமைகளும் பற்றிப் பேசுகிறது இந்த வகையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அடிப்படை உரிமைகள் மாகாணசபை முறைமை நீதித்துறை தேர்தல் முறைமை சுயாதீன ஆணைக்குழுக்கள் என்பன அரசியல் அமைப்பில் குறிப்பிடத்தக்க விசேட அம்சங்களாகும்.

துபாயில் இவ்வகையில் 1972, 1978ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த அரசியல் அமைப்புகள் மூலம் சுட்டிக்காட்டி யவற்றில் பெரும்பாலானவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.. இந் நாட்டின் உயரிய சட்ட ஏற்பாடுகள் ஜனநாயகத்தையும் அதன் மீது உள்ள நம்பிக்கை இணையும் பலப்படுத்தி இருந்தபோதும் நடைமுறை அனுபவிப்பவர்கள் அதுவும் இலங்கை சட்டத்தையும் அதன் விளக்கங்களையும் சரிவர புரிந்து கொண்டவர்களுக்கு அது சரியாக புரியும் இலங்கை வாழ் மக்களில் எத்தனை சதவீதமான மக்கள் இலங்கை அரசியல் அமைப்பை முழுமையாக வழங்கியிருக்கிறார்கள். இலங்கையின் அரசியல் அமைப்பு தொடர்பான பூரண அறிவு அரசியல்வாதிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் எந்தளவு உண்டு என்பதெல்லாம் இன்றைய இலங்கை தீவின் அரசியல் ஜனநாயக நடைமுறைகளை ஆராய்ந்து பார்க்கும் ஒவ்வொரு புத்திஜீவிக்கும் விளங்கும் இத்தகைய நிலைமையில் இலங்கையில் வாழும் 70 வீதமான சிங்கள மக்களும் 30 வீதமான ஏனைய இலங்கை தமிழ் முஸ்லிம் மலையக தமிழர் பறங்கியர் சமூகங்களும் இதனுடைய பரப்பை எவ்வாறு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மாகாணசபை ஆட்சி முறைமை அடிப்படை உரிமைகள் மதச்சுதந்திரம் அரசகரும மொழி ஆட்சிமன்ற அதிகாரங்கள் நீதித்துறை நிதித்துறை அதிகாரங்கள் தொடர்பான விளக்கங்களை சரிவர புரிவதற்கும் விகிதாசார தேர்தல் முறைமை மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு முறை முறைமை அதன் உரிமைகள் தொடர்பாகவும் இடப்பட்டுள்ள நுட்பங்கள் இலங்கை பன்முகத் சமூகத்தினர் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டுமென அனுமதித்துள்ள போதும் ஆட்சியாளர்களால் இவை தடுக்கப்படுவதுடன் சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விதங்களுமே வரலாறாகியுள்ளன
கடந்த 70 ஆண்டுகளில் சிங்கள மக்களும் தமிழ் பேசும் மக்களும் தமது நியாயங்களை முன்வைத்து அகிம்சை ரீதியிலும் ஆயுத ரீதியிலும் பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தியும் பல்வேறு பொறுப்புகளை செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

மேலும் கடந்த 30 ஆண்டுகளில் வடக்கு கிழக்கு தமிழர் ஆயுத பலத்துடன் இருந்த வேளையில் சமஸ்டி தீர்வுக்கு சம்மதித்த இலங்கை அரசாங்கம் அது தொடர்பாக பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பேச்சு வார்த்தைகளையும் நடத்தி இருந்தது பண்டா செல்வா ஒப்பந்தம் திம்புப் பேச்சுவார்த்தைகள் இலங்கை இந்திய ஒப்பந்தம் ரணில் பிரபா ஒப்பந்தம் என உள்ளூரிலும் சர்வதேச சமூகத்திலும் அனுசரணையில் மத்தியில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து ஆகின. இருந்த போதும்ஏட்டிக்குப் போட்டியான புரிந்துணர்வின்மை காலம் தாழ்த்துதல் தீர்வை வழங்குவதற்கு உண்மையான மனமின்மை போன்றவை மூலம் ஒப்பந்தங்கள் கைவிடப்பட்டன.

என் விளைவுகள் சொர்க்கபுரியாக திகழ வேண்டிய இலங்கையை இழப்புகளும் பயங்கரமும் நிறைந்த நாடாக உலக வரைபடத்தில் அடையாளப்படுத்தின. இந்த கொடூர போர்ச்சூழலில் துயரங்களை இலங்கைத் தீவின் மக்கள் அனைவரும் அனுபவித்தனர்.
இனக்கலவரங்கள் மோதல்கள் சந்தேக படுகொலைகள் காணாமல் ஆக்கப்படுதல் சித்திரவதைகள் என அடிப்படை உரிமை மீறல்கள் பல அரங்கேற்றப்பட்ட நாடாக சின்னஞ்சிறிய தீவு விளங்கியது.

தொடர் குண்டு வெடிப்புகள் ஆயுத மோதல்கள் என்பன இடம்பெற்று இன்று இத் தேசம் ஆயுத மௌனிப்பின் பின் அமைதி ஆகியது. ஆயினும் இன்று அனைத்தும் இத்தீவில் வாழும் இளைஞர்களின் மனதில் அமைதியையும் சக வாழ்வையும் ஒருவரையும் அதனைத் தொடர்ந்த குரோத உணர்வுகளும் மேலோங்கி காணப்பட்ட தன்மையை இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலைவரங்கள் இலங்கையின் அபிவிருத்தியையும் தொழில் வாய்ப்பையும் பொருளாதாரத்தையும் அரசியலையும் பண்பாட்டையும் இன்னுமொரு சீர்குலைத்து விட்டன தேசத்தின் எழுச்சியும் வளர்ச்சியும் பற்றிய சிந்தனைகள் வெறும் கானல் நீராகவே காணப்படுகின்றது இன்று இலங்கை தீவானது பொருளாதார வளர்ச்சி குன்றி அபிவிருத்தியின் பெயராலும் போரின் விளைவுகள் ஆளும் தாங்கொணாத் கடன் சுமையைத் தாங்கி வருவாயை வட்டி செலவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

நாட்டின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புள்ள சேவை செய்பவர்கள் இன் வரி பணங்கள் சர்வதேச நாடுகளுக்கு கடன் வட்டி செலுத்தும் சூழ்நிலையை உருவாக்கி விட்டுள்ளது எமது தாய்நாட்டை மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் மாற்றுவோம் என்ற கருத்தாளர்கள் அனைத்தும் பேச்சு அளவாகவே அடையாளப்படுத்தியுள்ளன.

தேசிய சுதந்திரம் என்பது இத்தீவின் மக்களது சுதந்திரம் என்பதும் அவர்களது கிழமை அடிப்படை உரிமைகள் ஜனநாயக பண்புகள் பல்லினப் பண்பாடு விழுமியங்கள் அமைதி சமாதானம் கருத்தியல் சுதந்திரம் என்பதும் இத்தீவில் வாழும் சகல இன மக்களும் அறிவிப்பு அதற்குரிய வாய்ப்பும் வசதியும் செய்து கொடுக்கப் பட்டதாக அமைய வேண்டும்.

இலங்கை சட்டவாக்கம் பற்றிய அறிவு குறைபாடுகள் காரணமாகவே இலங்கைத் தீவில் பன்முக சமூகம் அவர்கள் பிரதிநிதிகளால் சின்னாபின்னப் படுத்தப் பட்டுள்ளது சட்டத்திற்கு விரோதமான முறையில் இனவாதம் பிரதேசவாதம் சாதியம் தங்கள் சுயநலனுக்காக அள்ளி வீசப்படுகின்றன இதன் காரணமாக இலங்கை தீவின் அப்பாவி மக்கள் உணர்ச்சியில் உசுப்பேற்ற பட்டு மிகமோசமான வன்முறையாளர்களாக காலத்துக்குக காலம் இலங்கை பல சமூகங்களை பிரித்தாளும் கைங்கரியத்தை மிகச் சிறப்பான முறையில் முன்னெடுத்து வருகின்றனர் இத்தகைய நீதி விரோதப் போக்கை இலங்கையின் சுபிட்சமான எதிர்காலத்திற்கு சாவுமணி அடிப்பதாக உள்ளது நாம் இலங்கையர் என்ற உணர்வும் சிந்தனையும் இலங்கை மக்களின் உயரிய பண்பாடும் சிதைவுறும் படியான நடத்தைக் கோலங்கள்.

ஆகவே மேற்கு நம்பியிருக்கின்றன இதன் காரணமாக இலங்கை தீவின் மக்கள் தங்கள் பன்முக கலாச்சாரத்தை விளக்கவும் பரஸ்பர நம்பிக்கைம
யீனங்களுடன் பழகவும் அடிப்படையாக அமைந்துள்ளன இந்த சுட்டெரிக்கும் தீயை அணைப்பது யார் இலங்கைத்தீவின் அதி உன்னதமான பௌத்தத்தையும் அதற்கு இணையான போற்றுதற்குரிய ஏனைய மதங்களையும் அனுஷ்டிக்கும் மக்கள் இம்மத போதனைகளின் செந்நெறி வழிநின்று ஒழுகுவதற்கு பதிலாக இம்மதங்களின் போதனைகளையும் செய்திகளையும் செவிவழி கதைகள் ஆக்கி போதனை வழி குறித்து முரண்பட்ட பாதைக்குச் செல்வதன் நோக்கங்கள் வழிகாட்டிகளாக இருப்பது இத்தீவின் அரசியல்வாதிகளே என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இலங்கை ஆட்சி அதிகாரங்கள் சமூகத்திற்கு உரியதாக இருந்த போதும் அதிகாரத்தால் அது பிரித்தாள பெற்றுள்ளதே இன்றைய பிரச்சனை இந்த பிரித்தாளும் தந்திரம் உபாயங்கள் இலங்கைத்தீவில் வாழும் மக்களால் புரிந்துணர்வோடு முறியடிக்க முன்வரும்போது தான் இலங்கைத் தீவில் உண்மையான ஜனநாயகம் பிறக்கும் இலங்கை அரசியல் யாப்பின் படி சகலரும் சகலருக்கும் சம உரிமை கிடைக்கும் இத்தீவில் சௌஜன்னியத்தையும் சக வாழ்வையும் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்ட முடியும் ஊழலற்ற சமூகத்தையும் அபிவிருத்தியையும் பொருளாதாரத்தையும் நல்லாட்சியையும் கட்டியெழுப்ப முடியும்.

எனவே நாம் எங்கு சென்றாலும் இலங்கையர் இலங்கையர் ஆகிய நாம் இவ்வழகிய சின்னஞ்சிறிய தீவு இலங்கையர் என்ற வகையில் பிரிப்பதற்கு சர்வதேச மட்டத்தில் பின் தள்ளுவதற்கு விரும்பவில்லை இது எனது தாய் நாடு எமது உணர்வு எமது வியர்வை இரத்தத்தால் கட்டியெழுப்பப்பட்டது என்ற உணர்வுடன் ஆக்கியதோடு பயணிப்போம் அதற்கு ஆட்சியாளர்கள் இதயசுத்தியுடன் வழிவகுக்க வேண்டும் அரசியலமைப்பு அதிகாரங்களை முறையாக நடைமுறைப் படுத்துவதன் மூலமே தேசிய பாதுகாப்பையும் சுபீட்சத்தையும் கட்டியெழுப்ப முடியும்.