அபிஜித் பானர்ஜி: பொருளாதார நோபல் இந்தியர்

சந்தைப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் யோசனைகளுக்கும் அதன் போக்கைக் கணிப்பதற்கான புதிய உத்திகளுக்கும் கடந்த சில ஆண்டுகளாக முக்கியத்துவம் அளித்துவந்த நோபல் பரிசுக் குழு, இந்த ஆண்டு வளர்ச்சிப் பொருளாதாரத்தின் பக்கமும் வறுமை ஒழிப்பின் பக்கமும் கவனம்காட்டியிருக்கிறது.