அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும், பழிவாங்கல்கள் பற்றிய இலங்கைச் சிவில் சமூகத்தின் அறிக்கை

28 ஜூலை 2022
அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் பழிவாங்கல்கள் பற்றிய இலங்கைச் சிவில் சமூகத்தின் அறிக்கை


ஆயுதமேந்தாது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறை, போலி முத்திரை குத்தல்கள்
மற்றும் சட்ட ரீதியான பழிவாங்கல்கள் உள்ளடங்கலான தாக்குதல்களைக் கீழே ஒப்பமிட்டுள்ள தனிநபர்களான மற்றும் அமைப்புக்களான நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.