‘அம்மா’ ஜெயலலிதா என்ற ஆளுமையின் உள் பக்கங்கள்

 
(புகைப்படம் சிறுவயது ‘அம்மு’ ஜெயலலிதாவும் அவர் தாய் நடிகை சந்தியாவும்)
 
ஜெயலலிதாவின் மரணத்தால் வெற்றிடம் ஏற்படவில்லை அது வேறிடம் இற்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தன்னிடம் இருந்த ஆளுமையை சரியான திசை வழியில் இவர் பயன்படுத்தாமல் வேறு சிலரால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளாரோ என்ற கேள்விகள் என்னிடம் நீண்டகாலமாக உள்ளது. பிராமணிய ஆசாரத்தில் பிறந்து சிறுவயதில் தந்தையை இழந்து இதன்பின்பு நடிகையான தாயின் அரவணைப்பில் வாழ்ந்தவர். 1960 காலங்களில் தனது தாயாரின் மீது (தமிழ்) திரையுலக ஆண் வக்கிரங்களின் துன்பங்களை இவரின் பிஞ்சு மனத்தில் காயங்களை எற்படுத்தியிருக்கலாம்…? இதனைத் தொடர்ந்து தனக்கும் திரையுலகத்திலும் வெளியிலும் ஏற்பட்ட சொந்த அனுபவங்களால்…. தகப்பன் ஸ்தானாத்தில் இருந்த எம்.ஜி.ஆர் இனால் ஏற்படுத்தப்பட்ட ‘வைச்சுக்கிறேன்’ என்ற உறவும்… அரசியல் பொதுவாழ்வில் எம்ஜிஆர் இன் மறவை ஒட்டிய அவமானங்களும்…. இதன் உச்சமான சட்டசபை துயில் உரிவும் இவரின் பிஞ்சுமனத்தில் ஏற்பட்ட உளவியல் தாகத்தை மேலும் ஒரு உச்ச நிலைக்கத் தள்ளிச் சென்றிருக்கின்றது.

இவற்றிற்கு பழிவாங்கும் நடவடிக்கையின் வடிவங்களே இவரிடம் ஆட்சியதிகார காலத்தில் ஏற்பட்ட வெட்கப்படகூடிய செயற்பாடுகளுக்கு காரணமாக இருந்திருக்கின்றன என்பது எனது மனதில் உளவியல் பற்றிய ஆய்வுகளின் அடிப்படையின் எனக்கு ஏற்பட்ட புரிதல் ஆகும். இது மேலும் உச்சநிலையை அடையும் போது நான் என்ற அகங்காரமும் யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற உளநிலை பாதிக்கப்பட்ட ஒருவாராகவே இவர் தனது ஆட்சியதிகாரகாலத்தில் பெரும்பாலும் செயற்பட்டார். இவ்விடயத்தில் இவரை ஒருவகை உளவியல் நோயாளியாகப் பார்த்து அனுதாபப்படுகின்றேன். இதில் தீமையிலும் நன்மை போல் தாதாகளை சில நாட்களில் என்கௌண்டரில் (எனக்கு இம்முறையில் உடன்பாடு இல்லை என்றாலும்) ‘கட்டுக்குள்’ கொண்டு வந்து வீரப்பன் போன்றவர்களின் மரணத்தையும் உறுதி செய்தது.
 
மேலும் இவருள் இருந்த மனத்தில் ஈரப் பக்கங்களே அம்மா என்ற பெயரில நடைபெற்ற இனாம்களும் இலவசங்களும் சலுகைகளும் குறைந்த விலைச் சாப்பாடுகளும் பொருட்களும் ஆகும். இதனை தனது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள இவர் பாவித்தார் என்பது இதற்குள் அடங்கியிருக்கின்றது என்பதையும் நான் பார்க்கின்றேன். எம்ஜிஆரி இனால் ஏற்பட்ட உளவியல் தாக்கமும் கருணாநிதியினால் ஏற்பட்ட துயிர் உரிவையும் உயர் பதவில் இருக்கும் தான் வெளிக்காட்டுவது தன்னை தரம் குறைத்து காட்டிவிடும் என்பதினாலேயே மேடைகளில் இவற்றை நேரிடையாக பேசுவதில்லை. மற்றயபடி இந்த வஞ்சகங்கள் இறக்கும் வரை அவர் மனத்தில் கனற்று கொண்டே இருந்திருக்கும்.
 
எனக்கு புரியாதது இவரின் சொத்து (தேவைக்கு? அதிகமாக) சேர்தது பற்றி விடயத்தில் இருக்கும் உளவியல் பின்னணியும்…. சசிகலாவிற்கும் இவருக்குமான உறவின் தன்மையும்(தனிமைக்கு ஒரு துணை வேணும் என்ற வகையிலான உறவு என்பதை என்னால் ழுழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை). பொதுவெளியில் இவர் சோ இராமசாமியை வை மட்டுமே இந்த (ஆண்)வஞ்சகர்கள் பட்டியலில் வைத்திருக்கவில்லை. ஈழத் தமிழர் விடயத்தில் பிரபாகரனை டஎப்போதும் இவர் நம்பவில்லை ஏற்கவும் இல்லை. ஏன் வெறுக்கவே செய்தார். ஆனால் ஆட்சியதிகாரத்தில் இருந்த இவரின் போட்டியாளர்களை தலையெடுக்கவிடாமல் செய்ய ஈழம் பற்றி உச்சக்கட்ட தீர்மானங்களை, பேச்சுக்களை இவர் செய்தார்.
 
ஊர் எல்லாம் அம்மா என்று அழைக்கும் போது தனது இரத்த உறவு தன்னைப் பொது வெளியில் அம்மா என்று அழைக்க முடியாத நிலையும் இதன் ஊற்றுவயான ‘சோபன்பாபு’ கள் மீதான வஞ்சமும் புரிந்து கொள்ளப்பட வேண்டியவையே! 
(சாகரன்)